பக்கம்:கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

கரத்தைப் போட்டுவிட்டால் பொருளில் ஐயமேற்படு மாகையால் அந்த மொழியின் இறுதியில் றகர ஒற்றையேதான் போட்டிருக்கிறோம். ஆனால் அடுத்த வார்த்தையின் முதலெழுத்து தகரமாய்த்தான் இருக்கும். ஒரு அடைமொழிக்கு வேறு அடைமொழிகள் வரும்போது சாத்தியமான இடங்களிலெல்லாம் அடைமொழித் தொடரை நெருக்கிப் போட்டுப் பெயர்ச் சொல்லைக் கொஞ்சம் தள்ளியே போட்டிருக்கிறோம். ஒரு பெயர் அல்லது வினைக்குப் பல பெரிய அடைகள் வரும்போது தனித்தனி அடைகளுக்கு மத்தியில் ஒரு வாட்குறியும் போட்டிருக்கிறோம்.

இப்படியெல்லாம் செய்திருந்தாலும் கம்பனுடைய வாக்கு எள்ளளவேனும் மாறுபட்டிராது. நாம் எழுதியிருக்கிற பாட்டுகளைப் புணர்ச்சி கூட்டிப் படித்துவிட்டால் சாதாரணமான பதிப்புக்களிலுள்ள பாடமாகி விடும். கம்பனுடைய பிரயோகத்தை உள்ளது உள்ளபடியே காட்டவேண்டும் என்று 46ஆம் செய்யுளில் ஆதி மதியும் நீதி நிலையும் என்று எழுதுவதற்குப் பதிலாக ஆதிம்மதியும் நீதிந் நிலையும் என்றே எழுதியிருக்கிறோம். பாதிம்முழுதும் என்று துவக்கும் நான்காம் அடியில் பாதி என்பதன் பிறகு பொருள் நிறுத்தம் வேண்டுவதனால் புள்ளி வாட்குறி போட்டிருக்கிற காரணம் பற்றியும், படிப்போர் எதுகை நோக்கி மகரம் இரட்டிக்குமென்று அறிந்துகொள்ளுவார்கள் என்பது பற்றியும், மகர ஒற்றைப் போடவில்லை. இதிலிருந்து கம்பனுடைய வாக்கு விஷயத்தில் நாம் எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்திருக்கிறோம் என்று பண்டிதர் கவனிப்பார்களென நம்புகிறோம்.

இனி கம்பனுடைய சரித்திரத்தையும் அவன் விளங்கிய காலத்தையும் சற்று ஆராய்ந்து பார்ப்போம்.

கம்பனுடைய சரித்திரத்தைப்பற்றியும் காலத்தைப் பற்றியும் நம் காலம் வரையில் எட்டியிருக்கிற ஒன்றோடொன்று முரணுகிற பல கர்ணபரம்பரைகளுக்கிடையில்