16
என்று கர்ணபரம்பரை சொல்லுகிறது. ஆகவே மிகப் பலமான காரணங்களிருந்தாலொழிய, கம்பன் ராமாயணத்தை அரங்கேற்றியது சாலிவாகன சகம் 807-ம் ஆண்டு என்பதைத் தள்ளிவிட நமக்குப் பாத்தியமில்லை. துவாபரயுகம் அல்லது வேறு யுகாந்தரங்கள் என்று மிகவும் தூரமான காலமாகச் சொல்லப்பட்டிருந்தால், கம்பனுடைய காலம் தெரியாததாலோ, அல்லது அவனுக்குப் பெரும் பழைமையைக் கற்பித்து அதனால் அவனுக்கு அபார பகிமையை உண்டாக்கலாம் என்கிற தவறான எண்ணத்தாலோ ஜனங்கள் அந்தப் பிரகாரம் கூறியிருக்கிறார்கள் என்று கொள்ளலாம். ஆனால் சகம் 807 மிகப்பழமையான காலமல்ல. ஆகையால் இந்தப்பாட்டு கம்பனுடைய நாளிலேயே அல்லது அதற்குச் சில நாட்களுக்குப் பிந்தியேதானோ பாடப்பட்டிருக்க வேண்டும் என நினைப்பது நியாய விரோதமாகாது. கம்பன் காலம் சகம் 8-9ம் நூற்றண்டுகளல்ல என்றும், அவன் சகம் 1042-ம் ஆண்டுக்கு அணித்தாகப் பிறந்து 1122-க்கு அணித்தாக இறந்திருக்க வேண்டும் என்றும் சில பண்டிதர்கள்*[1] அபிப்பிராயப்
- ↑ இவர்களுக்குள் கல்வியாலும், கேள்வியாலும், கூரிய அறிவாலும் தலையாயவர், “செந்தமி"ழின் பத்திரிகாசிரியராக இருந்த ஸ்ரீமான் ரா.ராகவையங்காராவர். கம்பன் காலத்தைப் பற்றி அவர் செய்திருக்கிற நிர்ணயத்தை நாம் மறுக்கிறோமானாலும், அவருடைய நுண்ணறிவையும் தமிழபிமானத்தையும், கம்ப பக்தியையும் நாம் பெரிதும் மதிக்கிறோம். அவர் “செந்தமிழ்" 2, 3-வது தொகுதிகளில் சேர்த்துள்ள அரிய மேற்கோள்கள் இல்லாவிடில் இந்த வியாசத்துக்குப் போதுமான ஆதாரங்கள் எமக்குக் கிடைத்திராது. ஆகையால் அவருக்கு நாம் கடப்பாடுடையோம் என்கிற விஷயத்தை, இங்கே மனப்பூர்த்தியாகத் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.