பக்கம்:கரிகால் வளவன்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

எதிர்பார்க்கவில்லை. திடீரென்று தெரியவே, ‘இறைவன் திருவருள்தான் இப்படிக் கூட்டிவைத்திருக்க வேண்டும்’ என்று உள்ளுக்குள் உவகை மூண்டனர். மன்னனுக்கு மகன் இல்லையே என்ற பெருந் துயரத்தைப் போக்க அந்தச் செய்தி உதவியது. ஆம்! அரசி கருவுற்றிருந்தாள்.

இதனைக் கேட்டபோது சான்றேர்களுக்குத் துயரமும் மகிழ்ச்சியும் மாறி மாறி ஏற்பட்டன. ‘இத்தனை சிறப்போடு வாழ்ந்த மன்னன் தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையைப் பார்க்க முடியாது போல் இருக்கிறதே! என்று துயருற்றார்கள். மன்னனுக்கு அந்தப் பாக்கியம் இல்லாவிட்டாலும் அந்தக் குழந்தையைச் சோழ நாட்டு மக்கள் மன்னனாகக் கொண்டு இன்புறுவார்கள்!’ என்ற எண்ணம் அவர்களுக்கு ஆறுதலையும் இன்பத்தையும் தந்தது.

இந்தப் புதுச் செய்தியை எல்லாருக்கும் தெரிவிக்க வேண்டாம் என்று அவர்கள் தீர்மானித்தார்கள். குழந்தை பிறந்து வளர்ந்து தக்க பருவம் வரும் வரையில் பாதுகாப்பது பெரிய காரியம் அல்லவா? இந்தச் செய்தி வெளிப்பட்டால் பகைவர்கள் சோழ குலத்தின் தொடர்பை நீடிக்க வந்த குழந்தையைக் கொல்லச் சதி செய்வார்கள். மற்றொரு நினைவும் அவர்களுடைய மகிழ்ச்சிக்குப் பெரிய தடையாக இருந்தது. அரசி கருவுற்றிருப்பது நல்ல செய்திதான். ஆனால் பிறக்கும் குழந்தை ஆணாக இருக்க வேண்டுமே! இல்லாவிட்டால் சோழ நாட்டுக்கு என்ன பயன்? இவ்வளவையும் யோசித்து அரசி கருவுற்றிருக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/11&oldid=1340556" இலிருந்து மீள்விக்கப்பட்டது