பக்கம்:கரிகால் வளவன்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

கூறினார், இரும்பிடர்த்தலையார். குழந்தை தன் தோளைத் தட்டிக்கொண்டு சிரித்தான்.

குழந்தைக்கு இரும்பிடர்த்தலையார் கல்வி புகட்டினார். சோழர் குலப் பெருமையைக் கதை கதையாகச் சொன்னார். தமிழின் சிறப்பை எடுத்துக் காட்டினர். அவர் சங்கப் புலவர் அல்லவா? திருமாவளவன் உடம்பு வளர்ந்தது போலவே அறிவும் வளர்ந்தது. அது கண்டு அன்னையும், அம்மானும் மகிழ்ச்சி கொண்டனர்.

“ஐயோ! குழந்தையைக் காணவில்லையே! இங்கேதான் விளையாடிக்கொண்டிருந்தான். இப்போது காணவில்லையே!” என்று அழுதாள் தாய்.

இரும்பிடர்த்தலையார் காவிரிப்பூம் பட்டினத்துக்குச் சென்றிருந்தார். தக்க பாதுகாப்பைச் செய்து விட்டுத்தான் போயிருந்தார். வளவன் காலையில் தாயோடு பேசிக்கொண்டிருந்தான். “அம்மா, இன்னும் நாலைந்து ஆண்டுகள் போனால் பெரியவனாகி விடுவேன். காவிரிப்பூம் பட்டினத்துக்கு அப்போது போகலாம் அல்லவா? அங்கே போய் நம்முடைய அரண்மனையையும் சிங்காதனத்தையும் பார்க்க வேண்டுமென்று எவ்வளவு ஆசையாக இருக்கிறது தெரியுமா?” என்று சொன்னானே! மாலையில் அவனைக் காணவில்லை. சின்னஞ் சிறு குழந்தையாக இருந்தால் இடுப்பில் வைத்துக்கொள்ளலாம். ஓடியாடிப் பேசி எல்லாம் தெரிந்துகொள்ளும் பருவம் வந்த பிள்ளையைக் கட்டுக் காவலில் வைக்க வேண்டிய அவசியம் என்ன? அவனும் தனக்கு