பக்கம்:கரிகால் வளவன்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29

மல் அவரும் உயிர் விட்டாரோ! இவ்வளவு காலம் எத்தனையோ இரகசியங்களைப் பாதுகாத்து வந்தாரே குழந்தை எப்படி இறந்தது? நோயினாலா? பகைவர்களின் சூழ்ச்சியினாலா? - அவர்கள் யோசனை தடைப்பட்டது. மேலே மனம் ஓடவில்லை.

ஒருவருக்கு ஒருவர் தம் தம் கருத்தைப் பரிமாறிக்கொண்டனர்.

“சோழ நாட்டுக்கு உரிய அரசன் ஒருவனைத் தெரிந்தெடுத்து அவன் கையில் நாட்டை ஒப்பிப்பதையன்றி வேறு வழி இல்லை.” இப்படி ஒருவர் சொன்னார்.

‘தெரிந்தெடுப்பதா? யாரை யென்று தெரிந்தெடுப்பது? என்ன தகுதியைக் கொண்டு தெரிந்தெடுப்பது?’ என்று கேட்டார் ஒருவர்.

“சோழ குலத்தோடு தொடர்பு உடையவர்களில் தகுதி உடையவரைத் தெரிந்தெடுப்பது.”

“சோழகுலத் தொடர்புடையவர்களென்று இப்போது சொல்லிக்கொண்டு திரிகிறவர் ஒருவரா, இருவரா? அத்தனை பேரும் நாட்டின் நன்மையை நினைப்பவர்களா? அவர்களில் யாரைப் பொறுக்குவது?”

புதிய அரசனைத் தெரிந்தெடுப்பதில் உள்ள சிக்கல்கள் பல என்பதை அமைச்சர்கள் உணர்ந்தார்கள். “தெய்வமே வந்து ஒருவனைச் சொன்னாலொழிய, அமைதியாக ஒரு மன்னனை நாம் பெற முடியாது போல் இருக்கிறதே!” என்று ஒருவர் பெருமூச்சு விட்டார்.

தெய்வம் என்ற பேச்சு வந்தவுடன் எல்லாருக்கும் சிறிது ஊக்கம் உண்டாயிற்று. தெய்வ