பக்கம்:கரிகால் வளவன்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

நம்பிக்கையில் சிறிதும் குறையாதவர்கள் அல்லவா? ஒருவர் சொன்னார்: “இனிமேல் தெய்வத்தின் திருவருளுக்கு இதை விட்டுவிடவேண்டியதுதான்.”

“என்ன செய்வது?” என்று இளைஞராகிய அமைச்சர் ஒருவர் கேட்டார்.

“பழைய காலத்தில் ஒரு வழக்கம் உண்டென்று கேட்டிருக்கிறேன். பட்டத்து யானையின் கையில் மாலையைக் கொடுத்து இறைவன் திருவருளே எண்ணி விட்டுவிட்டால் அது யாரிடம் சென்று மாலையைப் போடுகிறதோ அவனேயே அரசகை ஏற்றுக்கொள்ளுவார்கள்.”

யாவரும் மீண்டும் ஆலோசனையில் ஆழ்ந்தனர். முடிவாக அப்படியே செய்யலாம் என்று தீர்மானித்தனர்.

ரசன் இல்லாத அரண்மனையில் பட்டத்து யானைக்கு என்ன வேலை? அந்த யானையை வீணே கட்டி வைத்துக்கொள்வதைவிட நல்ல இடத்தில் இருக்கும்படி செய்யலா மென்ற எண்ணத்தால், காவிரிப்பூம் பட்டினத்தை அடுத்த கழுமலத்தில் விட்டுவைத்தனர். இன்று சீகாழி என்று வழங்கும் ஊரே அன்று கழுமலம் என்ற பெயரோடு விளங்கியது. அங்குள்ள திருக்கோயிலில் சோழ அரசனது பட்டத்து யானை இருந்து வந்தது. அரண்மனையில் வளர்ந்த யானை பிறரிடம் வாழ்வதை விடக் கோயிலில் வாழ்வது பொருத்தந்தானே?

பட்டத்து யானையைக் கொண்டு அரசனைத் தெரிந்தெடுக்க எண்ணிய அமைச்சரும் பிறரும் தம்