பக்கம்:கரிகால் வளவன்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4. வெண்ணிப் போர்

“சின்னஞ் சிறு குழந்தை; இன்னும் உலக இயல்பை அறியும் பிராயம் வரவில்லை. அதற்குள் சிங்காதனம் ஏறிவிட்டான். இவ்வளவு காலமும் அரண்மனையில் வளரவில்லை. அரச குலத்துக்குரிய சிறப்போடு வாழவில்லை. கற்கவேண்டிய கலைகளையும் முறைப்படி கற்கவில்லை. இன்னும் காலில் உள்ள காப்பை வாங்காத பருவத்தில் செங்கோல் பிடிக்கும்படி இறைவன் திருவருள்செய்துவிட்டது. இனி அந்தத் திருவருளே துணையாக இருந்து அரசை நடத்தினாலாழியச் சோழநாடு பண்டைப் பெருமை குன்றாமல் இருப்பது அரிது” என்றார் ஒருவர்.

“என்ன, அப்படிச் சொல்கிறீர்கள்? பகைவர்களுடைய தீம்புகளுக்கும் வஞ்சகச் செயல்களுக்கும் தப்பி வந்திருக்கிறான் நம் மன்னன். மறைந்திருந்த மாணிக்கத்தைக் கண்டெடுத்தாற் போலப் பட்டத்து யானை சோழர்குலத் தோன்றலைக் கண்டுபிடித்து எடுத்து வந்திருக்கிறது. இவ்வளவு காலம் இந்தக் குழந்தையை ஊரார் அறியாமல் வளர்த்து வந்தாரே இரும்பிடர்த் தலையார்; அவர் இருக்கும்போது மன்னனுக்கு என்ன குறை? எல்லா வகையிலும் சிறந்த பேரறிஞராகிய அவர் அரசனுக்கு வேண்டிய கல்வியைக் கற்பித்திருப்பார். அன்றியும், நாதனற்று அலமந்த சோழநாட்டை இந்த இடைக்காலத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/40&oldid=1232480" இலிருந்து மீள்விக்கப்பட்டது