பக்கம்:கரிகால் வளவன்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

பாதுகாத்த அமைச்சர்களும் சான்றோர்களும் இருக்கிறார்கள். அவர்களுடைய பெருந்துணை கரிகால் வளவனுக்கு இருக்கும்போது என்ன பயம்?” என்றார் மற்றொருவர்.

“இப்போது உள்ளபடி இருந்தால் அச்சம் ஒன்றும் இல்லை, ஆனால் சோழ நாட்டின் பெருவளத்தில் நாட்டமுடைய மன்னர்கள் பலர் இருக்கிறார்கள், பல குறு நில மன்னர்கள் சமயமறிந்து வீழ்த்துவதற்குக் காத்திருக்கிறார்கள். எந்தச் சமயத்தில் யார் படையெடுப்பார்களோ!”

“அரசன் ஒருவன் இருக்கிறான் என்ற தைரியம் மக்களுக்கு வந்துவிட்டது. எந்தப் பகைவன் வந்தாலும் எதிர்த்து நிற்கும் ஆற்றல் சோழநாட்டுப் படைவீரர்களுக்கு உண்டு. மன்னன் இளையவனாக இருந்தாலும் அரசியல் வேலைகளிலே கண்ணுங் கருத்துமாய் இருப்பதாகச் சொல்கிறார்கள். பாருங்கள்: முடிசூடியவுடன் அவன் செய்த முதல் வேலை, படைப்பலத்தை அதிகமாக்கும் செயல்தான்.”

இவ்வாறு சோழ நாட்டு மக்கள் கரிகாலனைச் சிறப்பித்துப் பேசுவாரும், பகைவர் வந்து படையெடுப்பார்களே என்று அஞ்சுவாருமாக இருந்தனர். சிங்காதனத்தை எளிதிலே கைப்பற்றி விடலாம் என்று. எண்ணிய பகைவர் இப்போது போர் செய்தாலன்றித் தம் எண்ணம் கைகூடாதென்று தெரிந்துகொண்டனர். ஆகவே, அவர்கள் தம் படைப்பலத்தைப் பெருக்கிக் கொண்டார்கள்.

சோழ நாட்டைச் சார்ந்திருந்த வேளிர் பலர் கரிகாலன் பலம் பெறுவதற்கு முன்பே போரிட்டு