பக்கம்:கரிகால் வளவன்.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

அவன் சிங்காதனத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று நினைத்தனர். இந்த எண்ணம் உடையவர்கள் அங்கங்கே இருந்தரர்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துச் சோழ நாட்டைக் கைப்பற்ற என்ன செய்யலாம் என்று யோசித்தார்கள். பதினொரு பேர் இந்தக் கூட்டத்தில் சேர்ந்தனர்.

“நாம் எதிர்த்தால் அதற்குரிய படைப்பலம் நமக்கு இல்லை. பெரிய மன்னன் ஒருவனுடைய உதவி இருந்தாலொழியப் போரை நடத்த இயலாது. அப்படி நாம் வென்றாலும் நம்கீழ்ச் சோழ நாடு அமைதியாக இராது. வேறு வேளிர்கள் நம்மை எதிர்ப்பார்கள். ஆகையால் பேரரசன் ஒருவனுடைய ஆதரவை நாடி நம் சூழ்ச்சியை நிறைவேற்றலாம்” என்ற கருத்து அவர்களிடையே எழுந்தது. முதலில் பாண்டிய மன்னனுடைய உதவி கிடைக்குமா என்பதை அறிய எண்ணினர்.

சில வேளிர்கள் பாண்டி நாடு சென்று, சோழ அரசன் இளையவனென்றும், பேருக்கு அரசனாக இருக்கிறானென்றும், சோழ நாட்டு அரசியல் பொம்மை நாடகமாக இருக்கிறதென்றும் சொன்னார்கள். “எவ்வளவோ பாண்டியர்கள் சோழ நாட்டையும் தம் ஆட்சிக்கீழ் வைத்து ஆண்டிருக்கிறார்கள். உங்களை அந்தப் பாக்கியம் வலிய வந்து அடைய இருக்கிறது. நாங்கள் பதினொருவர் உங்களுக்கு உதவி செய்வோம். சோழ நாட்டு மக்களுக்கும் தக்க அரசன் தங்களுக்கு இல்லையே என்ற குறை இருக்கிறது. போர் தொடங்கினால் அவர்கள் நம்மை எதிர்க்கமாட்டார்கள். சிலர் நம் படையில் சேரக்கூட வரு-