பக்கம்:கரிகால் வளவன்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

முற்றுகையிடும் வரையில் காக்கக்கூடாதென்று வேகமாகச் சென்றான். அவனுடைய மன வலியைக் கண்டு படைத்தலைவர்கள் வியந்தனர். படை வீரர்களுக்கு மிக்க ஊக்கம் உண்டாகிவிட்டது. அங்கங்கே உடல்வலிமை பெற்ற மக்கள் தாமே வந்து படையில் வலியச் சேர்ந்தனர்.

சோழப் பெரும்படையும் சேரபாண்டியர் படைகளும் சந்தித்தன. சோழர் படைக்குத் தலைவன் கரிகாலன் ஒருவனே. மாற்றார் படையிலோ, சேரனும், பாண்டியனும், பதினொரு வேளிரும் தலைவர்கள். அவர்கள் தங்கள் தங்கள் படைக்குத் தலைமை வகித்தார்கள். இருபுறத்துப் படைகளும் சந்தித்தன. போர் மூண்டது; வெண்ணி யென்னும் ஊரில் இரு படைகளும் நின்று போர் செய்தன.

சோழ சரித்திரத்திலே நிகழ்ந்த பெரிய போர்களுள் வெண்ணிப் போர் ஒன்று. ஓர் அரசனை இரண்டு பெரிய மன்னர்களும் பதினொரு குறு நில மன்னராகிய வேளிரும் எதிர்த்தார்கள். சோழ அரசனாகிய கரிகாலனோ இளையவன். ஆனாலும் அவனுடைய விறல் எல்லோரினும் சிறந்திருந்தது. சோழர் படையில் இருத்தவர்களுக்குச் சோழ நாட்டுப் பற்று மிகுதியாக இருந்தது. இரும்பிடர்த்தலையார் சோழ நாட்டு மக்கள் உள்ளத்தில் தேச பக்திக் கனல் பொங்கும்படி செய்தார். அதனால் நாள்தோறும் நாட்டு மக்களுடைய ஆதரவு அதிகமாயிற்று.

மாற்றான் படை அளவில் பெரியதாக இருந்தாலும், வெவ்வேறு தலைவரின் கீழ்ப் போரிட்டது. சில சமயங்களில் யார் பகைவர், யார் தம் கட்சியினர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/46&oldid=1205597" இலிருந்து மீள்விக்கப்பட்டது