பக்கம்:கரிகால் வளவன்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41

என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. வேளிர்களின் கீழிருந்த படைவீரர்கள் வெறும் கூலிப் படைஞர்கள். அவர்களுக்குத் தேசபக்தியோ வேறு உயர்ந்த கொள்கையோ இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாகப் போர் நடப்பது சோழ நிலம். சோழ நாட்டில் சோழப் படைக்குத்தான் பலம் அதிகம் என்பதைச் சொல்லவா வேண்டும்? மாற்றார் படைக்கு உணவு முதலியன சுருங்கிவிட்டால் பாண்டி நாட்டிலிருந்தோ சேர நாட்டிலிருந்தோ வரவேண்டும். சோழ நாட்டில் உள்ள மக்கள் மறைவாகவோ, வெளிப்படையாகவோ தமக்கு உதவி புரிவார்கள் என்று வேளிர்கள் எதிர்பார்த்தார்கள். அப்படி நடக்கவில்லை. சோழ நாட்டுப் படை ஒருமுகமாகப் போர் செய்தது. கரிகாலன் தெய்வத்தின் திருவருள் பெற்ற தேவன் என்ற எண்ணம் வீரர்களுக்கு இருந்தது. பெரிய யானையின்மேல் இளங்கதிரவன் எழுவது போல அல்லவா போருக்குப் புறப்பட்டு முன்னே நின்றான்? ஆத்தி மாலையைச் சூட்டிக்கொண்டு வீறு பெற்று அவன் புறப்பட்ட வேகம் எல்லா மக்கள் உள்ளத்திலும் வீரக் கனலை மூட்டியது. தானே நேரில் சென்று போரை அந்த இளங் குழந்தை நடத்துவான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆகவே, அவன் புறப்பட்டான் என்ற செய்தியைக் கேட்டு ஆண்மையுள்ள மக்களெல்லாம் படையில் சேர்ந்து புறப்பட்டுவிட்டார்கள்.

போர் கடுமையாக நடந்தது. முதல் முதலில் வேளிர் படையில் சலசலப்பு உண்டாயிற்று. எங்கே தளர்ச்சி உண்டாகிறதோ அந்தப் பகுதி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/47&oldid=1205639" இலிருந்து மீள்விக்கப்பட்டது