பக்கம்:கரிகால் வளவன்.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5. இமயத்தில் புலி

ரிகாலன் சின்னஞ் சிறு பிராயத்திலேயே சேர பாண்டியர்களை வென்றதனால் சோழ நாட்டு மக்களுக்கு அவனிடத்தில் அளவற்ற அன்பு உண்டாயிற்று. அவனுக்கும் இனி எத்தகைய பகை வந்தாலும் தன் நாட்டு மக்களின் உதவியால் வென்று விடலாம் என்ற நம்பிக்கை வன்மை பெற்றது.

ஆனால் பகைவர்கள் சும்மா இருப்பார்களா? மீண்டும் தக்க சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஒன்பது குறு நில மன்னர்கள் கரிகாலனுக்கு மாறாகச் சூழ்ச்சி செய்தார்கள்; “இப்போது தான் பெரிய போர் நடைபெற்றிருக்கிறது. வெற்றி உண்டான களிப்பில் படை வீரர்களெல்லாம் மூழ்கியிருக்கிறார்கள். கடுமையாகப் போர் செய்தமையால் அதற்கு ஏற்றபடி அவர்களுக்கு ஓய்வு வேண்டியிருக்கும். இந்தச் சமயத்தில் நாம் எதிர்த்தால் நம் கருத்து நிறைவேறலாம். இனி நமக்கு யாரும் பகைவர் இல்லை என்ற இறுமாப்போடு இந்தச் சிறு பையன் இருக்கிறான். இவனுடைய வாழ்வைக் குலைக்க வேண்டும்” என்று பேசினார்கள்.

வெண்ணிப் போர் நடந்த சில மாதங்களில் மீண்டும் சோழ நாட்டில் போர் தொடங்கியது. இந்த முறை வாகை என்னும் இடத்தில் போர் நிகழ்ந்தது. முடியுடை மன்னர் யாரும் எதிர்க்க-