பக்கம்:கரிகால் வளவன்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

கரிகாலன் வேகம் தடைப்படவில்லை. போய்க் கொண்டே இருந்தான். கடைசியில் இமயத்தை அடைந்தான். வானளாவிய இமயமலையைக் கண்டவுடன் அவன் உள்ளத்தில் களி துளும்பியது. சோழர்களின் முன்னோர்களில் யாரும் செய்யாத பெரிய காவியத்தை அவன் செய்துவிட்டான். பகையரசர் யாரும் இன்றி வழியிலே உள்ள நாட்டினர்கள் அன்புடன் உபசரிக்க, இமாசலப் படை யெடுப்பு இமாசல யாத்திரையாக முடிந்தது. இந்தச் சிறப்பை உலகம் என்றும் நினைவு கூர்தற்கு ஏற்றபடி தான் சென்றடைந்த இமாசலப் பகுதியில் தன் புலிக்கொடியைச் சோழன் நாட்டினான். பல இடங்களில் தன்னுடைய புலிக்கொடியின் உருவத்தைக் கல்லிலே பொறிக்கச் செய்தான். இவ்வாறு சோழன் கரிகாலன் சென்று புலி பொறித்த இடம் சிக்கிம் பகுதியில் உள்ளதென்று ஆராய்ச்சிக்காரர்கள் சொல்வார்கள். அந்தப் பகுதியில் சோழ மலைத் தொடர் என்றும், சோழர் கணவாய் என்றும் இரண்டு இடங்கள் வழங்கி வருகின்றனவாம்.

இமயத்தில் புலி பொறித்த ஏற்றத்துடன் கரிகாலன் தமிழ்நாட்டை நோக்கி மீண்டான். அதுகாறும் அவனை எதிர்க்காமல் விட்ட மன்னர்களில் சிலருக்கு அவன். இமாசலத்தில் தன் அடையாளத்தை நாட்டினான் என்ற செய்தி சினத்தை மூட்டியது. கரிகாலன் திரும்பி வருகையில் வச்சிர நாட்டைக் கடக்க வேண்டி வந்தது. அந்த நாட்டு வேந்தன் கரிகாலனை எதிர்த்தான். இப்போது பண்டில்கண்ட் என வழங்கும் பகுதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/54&oldid=1205673" இலிருந்து மீள்விக்கப்பட்டது