பக்கம்:கரிகால் வளவன்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49

அது. அங்கே நிகழ்ந்த போரில் கரிகாலனே வென்றான். வச்சிர நாட்டு மன்னன் கரிகாலனுக்குப் பணிந்ததோடு தன் தோல்விக்கு அடையாளமாக ஏதேனும் ஒரு பொருளைக் கொடுக்க முன்வந்தான். கரிகாலனது வெற்றியை வெளிப்படுத்தும் சின்னமாக அது சோழ நாட்டில் விளங்க வேண்டும் என்பது சோழப் படைத்தலைவர்கள் எண்ணம். முத்தினால் பந்தர் அமைப்பதாக வச்சிர நாட்டு மன்னன் ஒப்புக்கொண்டான்.

வச்சிர நாட்டினின்றும் வெற்றி முழக்கத்தோடு புறப்பட்ட கரிகாலனை மகத நாட்டு மன்னன் எதிரிட்டுப் போர் செய்தான். அவனும் தோல்வியுற்றான். காவிரிப்பூம்பட்டினத்தில் ஒரு பட்டி மண்டபத்தை அமைத்துத் தருவதாக அவன் வாக்களித்தான்.

வச்சிர நாட்டிலும் மகத நாட்டிலும் கரிகாலன் பெற்ற வெற்றியைக் கேட்ட பிறகு இடைப்பட்ட நாடுகளில் உள்ள யாரும் கரிகாலனை எதிர்க்கத் துணியவில்லை. யாவரும் அன்புடன் உபசரித்து வழிவிட்டனர். அவந்தி நாட்டை வளவன் அடைந்தபோது அந்த நாட்டு மன்னன் கரிகாலனை எதிர்கொண்டு அழைத்துச் சென்றான். தக்க வண்ணம் உபசரித்து அவனோடு நட்புப் பூண்டான். அந்த நட்புக்கு அறிகுறியாகக் காவிரிப்பூம் பட்டினத்தில் தோரணவாயில் ஒன்றைச் சமைப்பதற்கு இசைந்தான்.

இத்தகைய சிறப்புகளையெல்லாம் பெற்ற கரிகாலன் காவிரிப்பூம்பட்டினத்தை வந்தடைந்தான். நகர மக்கள் அவனை வரவேற்று உபசரித்துக்

4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/55&oldid=1205677" இலிருந்து மீள்விக்கப்பட்டது