பக்கம்:கரிகால் வளவன்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6. உறையூரின் தோற்றம்

"தமிழ் நாட்டில் இதுகாறும் ஆண்ட மன்னர்களில் இவனைப்போல வீரமும் புகழும் உடைய மன்னர் யாரும் இல்லை” என்பதே தமிழுலகு முழுவதும் பேச்சாக இருந்தது. சோழப் பேரரசை மீண்டும் நிலைநாட்டியதோடு வட நாட்டுக்கும் சென்று, இமயத்தில் புலிக்கொடியை நாட்டிய திருமா வளவனுடைய புகழ் கடல் கடந்து சென்றது. இயற்கையாகவே சோழ நாட்டு வளத்தைக் காணவும், சோழ நாட்டுக் கரும்பையும், நெல்லையும், துகிலையும், கலனையும் வாங்கிச் செல்லவும் அயல் நாட்டு மக்கள் வருவார்கள். கரிகாலன் காலத்தில் பின்னும் அதிகமாக வந்தார்கள்.

சோழ நாட்டின் வளத்தைப் பெருக்கும் முயற்சிகளில் கரிகாலன் ஈடுபட எண்ணினான். முதலில் காவிரியின் நீரை ஒழுங்குபடுத்த நினைத்து அதன் இருமருங்கும் கரை கட்டத் தொடங்கினான். சோழ நாட்டுக்கு மேற்கே உள்ள இடங்களிலும் ஆற்றுக்குக் கரை கட்ட வேண்டும். கரிகாலன் ஆங்காங்கு உள்ள மன்னர்களுக்குத் தன் விருப்பத்தைத் தெரிவித்தான். தங்கள் தங்கள் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காவிரிக்கு உறுதியான கரையைக் கட்டிவிட்டால் எல்லாருக்கும் ஊதியம் உண்டென்பதை அவன் எடுத்துக் காட்டினான். கரை கட்டும் வேலையில் உதவச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/58&oldid=1232488" இலிருந்து மீள்விக்கப்பட்டது