பக்கம்:கரிகால் வளவன்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

கட்டும்; இல்லையானால் படத்துக்கு நேர்ந்த கதி அவனுக்கும் நேரும்” என்று சொல்லி அனுப்பினான்.

படத்தை உருத்திரனிடம் சேர்ப்பித்தார்கள். சிறந்த முறையில் அமைந்த ஓவியத்தைக் கண்டு அவன் முதலில் வியந்தான். அதில் நெற்றிக் கண்ணைக் குத்தியிருப்பதைப் பார்த்தான். “நெற்றியிலே கண் முளைத்துவிட்டதாகக் கர்வம் அடையாதே! அதை ஒரு கணத்தில் வேலால் குத்தி விடுவேன்!” என்று திருமா வளவன் அந்தப் படத்தின் மூலம் எச்சரிப்பதாக அவன் உணர்ந்தான். கரிகாலனைப் பகைத்துக்கொண்டு உலகில் வாழ முடியுமா? பாண்டியனும் சேரனும் பிற அரசர்களும் சாதிக்க முடியாததை இந்தச் சிறிய அரசன் சாதிக்க இயலுமா? - அவன் நன்றாக யோசனை செய்தான். இறுதியில் தானும் காவிரிக்கரை கட்டும் பணியில் ஈடுபடுவதாகச் செய்தி சொல்லி அனுப்பினான்.

காவிரிக்கு ஒழுங்கான கரை அமைந்தது. சோழ நாட்டின் வளம் பின்னும் பெருகும் என்ற நம்பிக்கை. யாவருக்கும் உண்டாயிற்று. கரை கட்டி முடிந்த பிறகு ஒரு முறை அந்தக் கரையைக் காண வேண்டும் என்ற நினைவு சோழ மன்னனுக்கு எழுந்தது. ஒரு நாள் தன் பட்டத்து யானையின் மீது ஏறிப் படைவீரரும் பிறரும் புடை சூழப் புறப்பட்டான். கரைபெற்ற காவிரியின் அழகைப் பார்ப்பதோடு கரையற்ற சோழ நாட்டு மக்களின் பேரன்பையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு அவனுக்குக் கிடைத்தது. சென்ற இடங்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/60&oldid=1232489" இலிருந்து மீள்விக்கப்பட்டது