பக்கம்:கரிகால் வளவன்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

உறையும் ஊராகவும் விளங்க வேண்டும்’ என்று தீர்மானித்தான்.

மேலே மிக்க வேகமாகக் காவிரிக் கரையைப் பார்த்துவிட்டுப் புகார் நகரம் அடைந்தான். நாட்டின் வளத்துக்கு உதவியாகக் காவிரிக்கரை ஒழுங்குப்பட்டது. இனி நகரம் ஒன்றை அமைக்கும் வேலையில் முனைந்தான் கரிகால் வளவன்.

கரிகாலன் நினைக்கும் காரியம் சிறப்பாக நிறைவேற என்ன தடை? சோழ நாடு முழுவதுமே உறையூர் நிர்மாணத்தில் ஈடுபட்டதென்று தான் சொல்லவேண்டும். வெறும் மரமடர்ந்த காடாக இருந்த இடம் மாடமாளிகை கூடகோபுரங்கள் நிரம்பிய நகரமாயிற்று. அழகிய தெருக்கள், அலங்காரமான பொழில்கள், எழில் நிரம்பிய முடுக்குகள் அமைந்தன. அழகான அரண்மனையையும் கட்டினார்கள், உறையூர் பெரிய நகரமாகிவிட்டது.

கரிகாலன் நல்ல நாளில் உறையூரில் உள்ள அரண்மனையில் புகுந்தான். அந்த மாநகரத்தில் ஒரு சிவாலயத்தை எழுப்பினான். சோழ நாட்டின் கடற்கரைப் பெருநகரம் காவிரிப்பூம்பட்டினம். அதற்குச் சிறிதும் அளவிலும் அமைப்பிலும் குறைவற்ற உள் நாட்டு இராசதானி உறையூர். கரிகாற் சோழன் இரண்டு நகரங்களிலும் மாறி மாறி வாசம் செய்து வந்தான்.

கோழியினால் குறிப்பிக்கப் பெற்ற இடத்தில் எழுந்த நகரமாதலின் அதற்குக் கோழி என்ற பெயர் அமைந்தது. கோழியின் மூக்கினால் யானை தடைப்பட்டமையால் அந்நகரில் உள்ள சிவாலயத்துக்கு மூக்கீச்சரம் என்ற பெயர் வழங்கியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/64&oldid=1232492" இலிருந்து மீள்விக்கப்பட்டது