பக்கம்:கரிகால் வளவன்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1. வளவன் பிறந்தான்

ரசன் நோய்வாய்ப் பட்டிருக்கிறான் என்ற செய்தி நாட்டு மக்களின் உள்ளத்தை என்னவோ செய்தது. வழி வழி வந்த சோழ நாட்டின் மணி முடி பெரிய வீரம் மிக்க மன்னர்களின் தலையை அணி செய்திருக்கிறது. சோழ சக்கரவர்த்திகளின் பெருமை காவியங் கண்டது. இளஞ்சேட்சென்னியின் வீரம் எவ்வளவு சிறந்தது! அவனுடைய கொடைத் திறத்தை உலகுள்ளளவும் எடுத்துச் சொல்வதற்கு நல்லிசைச் சான்றோர்களாகிய புலவர்களின் பாடல்கள் இருக்கின்றனவே சோழ நாட்டு மக்களின் உள்ளத்தில் அவன் இருந்தான்.

முடியுடை மன்னன் என்றாலும் அவன் குடி மக்களிடத்தில் எவ்வளவு எளிதில் பழகினான்! தங்களுக்குள்ள குறையை எந்த நேரத்திலும் அவனிடம் சென்று எடுத்து உரைக்கலாம். அவை யாவும் பெரிதல்ல. அவன் மணம் செய்து கொண்டானே, அதுதான் குடிமக்களின் பேரன்பை அவனுடைய காணியாக்கிக் கொண்டது. பாண்டியன் மகளும், சேர அரசன் புதல்வியும், வடநாட்டு மன்னர்களின் மடந்தையரும் இளஞ்சேட்சென்னிக்கு மாலையிடக் காத்துக் கிடந்தார்கள். ஆனால் அவன் காதல், அரண்மனையில் வளரும் பைங்கிளிகளை நாடவில்லை. சோழ நாடு சோற்றால் வளம் பெறுவது. அதற்குரிய நெல்லை விளைவிப்போரே சோழ நாட்டின் பெருமைக்குக் காரணமாக உள்ள-