பக்கம்:கரிகால் வளவன்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

65

முதல் நாள் வந்தவர்கள் அன்று தம் வழக்கைக் கூற வந்தார்கள். முதல் நாள் இளைஞன் என்று தாம் எண்ணியவன் சோழ சக்கரவர்த்தி என்பதை அவர்கள் அப்பால் தெரிந்து கொண்டார்கள். இன்றோ, அவன் கிழவனைப் போலக் கோலம் புனைந்து வந்திருப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார்கள். ‘நாம் எண்ணியதை இப்பெருமான் எப்படி அறிந்துகொண்டான்? நம்முடைய அறியாமையால் தோற்றிய குறையைத் தீர்ப்பதற்காகவே இந்தக் கோலம் புனைந்திருக்கிறான். இனி நம்முடைய பெருங் குறைகள் எல்லாம் இங்கே தீருவதற்கு என்ன தடை?’ என்று எண்ணி அளவற்ற மகிழ்ச்சியை அடைந்தார்கள்.

அவர்களுடைய வழக்கை அறங்கூறவையத்தினர் கேட்டு ஆராய்ந்து நியாயத்தை நிலை நாட்டினர்.

கரிகாலன் நரை முடித்து வந்த நிகழ்ச்சியைத் தமிழுலகம் முழுவதும் அறிந்து அம் மன்னனைப் பாராட்டியது. புலவர்கள் அதைப் பாட்டால் புகழ்ந்து பரப்பினார்கள்.

5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/71&oldid=1232496" இலிருந்து மீள்விக்கப்பட்டது