பக்கம்:கரிகால் வளவன்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

ஆற்றுப்படை பாடி அதில் கரிகாலன் புகழைப் பதித்து வைக்கலாம் என்று முடிவு செய்தார். பொருநர் என்பவர்கள் கையிலே தடாரி என்ற பறையை வைத்துத் தட்டிக்கொண்டு பாடுகிறவர்கள். அவர்களுடன் யாழ் வாசித்துப் பாடியும் ஆடியும் பரிசில் பெறும் விறலியரும் வருவார்கள். வறுமையில் ஆழ்ந்து தன்னை ஆதரிக்கும் வள்ளல் யாரையும் காணாமல் ஊர் தோறும் அலைந்துகொண்டிருக்கும் பொருநன் ஒருவனைக் கண்டு, கரிகால் வளவனிடம் சென்று பரிசில் பெற்ற மற்றொரு பொருநன் சொல்வதாக அந்தப் பொருநராற்றுப் படையைப் பாடினர்.

ங்கேயோ திருவிழாவுக்குப் பொருநன் போயிருந்தான். அங்கே அவனுடன் வந்த விறலி யாழ் வாசித்துப் பாடினாள். அவன் தடாரிப் பறை கொட்டினான். ஒரு கையால் வாசிக்கும் கருவி அது. விழாவில் நான்கைந்து நாள் அவர்கள் வயிறு நிரம்பச் சாப்பிட்டார்கள். விழா முடிந்தவுடன் அந்த ஊரை விட்டுப் புறப்பட்டுவிட்டார்கள். எங்கே போவது என்ற நிச்சயம் இல்லாமலே புறப்பட்டார்கள். விறலி தன் அழகிய யாழைச் சுமந்து சென்றாள். அவர்களுடன், உடம்பு மெலிந்த சுற்றத்தாரும் சென்றார்கள்.

இன்ன இடத்துக்குப் போவது என்ற திட்டம் இல்லாமையால் எதிர்ப்பட்ட வழியில் போனார்கள். அந்த வழி அவர்களை ஒரு காட்டினிடையே கொண்டுபோய் விட்டது. கோடை வெயிலால் ஈரத்தை இழந்து மரங்கள் எல்லாம் வாடி உலரப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/74&oldid=1205144" இலிருந்து மீள்விக்கப்பட்டது