பக்கம்:கரிகால் வளவன்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

எழுந்து நின்று மரியாதை செய்தான். மற்றவர்களும் எழுந்து ஒதுங்கி நின்றார்கள். அவர்கள் செயலைக் கண்டு, வந்த பொருநன் மனத்துக்குள்ளே சிரித்துக்கொண்டான்.

“நானும் உங்கள் இனத்தைச் சேர்ந்தவன் தான். என்னைக் கண்டதும் நான் யாரோ என்று மருண்டு விட்டீர்களென்று தோன்றுகிறது. நானும் உங்களைப் போலவேதான் பசியும் வறுமையும் வாட்ட வருந்தினவன். ஆனால் கரிகால் வளவனைக் கண்ட பிறகு என் வறுமை கால் வாங்கி ஓடி விட்டது. அவனுடைய அரண்மனை வாசல் என்றும் திறந்தே இருப்பது, நம்மைப் போன்ற இரவலர்கள் புகுந்தால் யாரும் தடை செய்ய மாட்டார்கள். நான் அங்கே போனேன். பல நாள் பட்டினி கிடந்தமையால் என் உடம்பு மிகவும் இளைத்திருந்தது. கையில் தடாரியை வைத்திருந்தேன். என் கை அழுக்கு அதில் படிந்திருந்தது. நான் விடியற்காலையில் அந்தத் தடாரியைக் கொட்டினேன். என்னவென்று சொல்வேன்! கரிகால் வளவன் நான் இருந்த இடத்துக்கே வந்துவிட்டான். நெடுநாட்களாகக் காணாத உறவினனைக் காண்பதுபோல அன்போடு என்னுடன் பேச ஆரம்பித்தான்.”

“உங்களிடம் கரிகால் வளவனே பேசினானா?”

“ஆம், நான் எந்தக் கோலத்தில் இருந்தேன் தெரியுமா? என் இடையிலே கந்தை இருந்தது; வேர்வையிலே நனைந்து பேனுக்கு உறையுளாக இருந்தது. கிழிந்த இடங்களைத் தைத்து உடுத்திருந்தேன். கரிகால் வளவன் என்னை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தான். அந்தப் பார்வையிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/76&oldid=1232499" இலிருந்து மீள்விக்கப்பட்டது