பக்கம்:கரிகால் வளவன்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

71

எத்தனை குளிர்ச்சி! என் என்பெல்லாம் சில்லென்று தண்ணிய உணர்ச்சியைப் பெற்றன. என் இடையிலே உள்ள ஆடையைக் களைந்தெறியச் சொல்லி வேறு புதிய ஆடையை அளித்து அணியச் செய்தான். பேன் குடியிருந்த ஆடை முன்பு என் இடையிலே இருந்தது.இப்போது மிகமிக மெல்லிய பூ வேலை செய்த ஆடையை அணிந்தேன். பிறகு மிக இனிமையான பான வகைகளைப் பொற்கிண்ணத்தில் அழகிய மகளிர் ஊற்றித் தந்தார்கள். என் தாகமும் பசியும் எனக்கல்லவா தெரியும்? அவர்கள் வார்க்க வார்க்க நான் வாங்கிக் குடித்துக்கொண்டே இருந்தேன்.

“பிறகு இளைப்பாறினேன். முதல் நாளில் நான் இருந்த இருப்பு என்ன! அப்போது நான் நுகர்ந்த இன்பம் என்ன! ஆளைப் பார்த்தால் அடையாளமே தெரியாது. அப்படி ஆடை அலங்காரங்களுடன் விளங்கினேன். முன்பு என் உடை நாற்றமும் உடல் நாற்றமும் எனக்கே சகிக்க முடியாமல் இருந்தன. இப்போதோ ஒரே நறுமணந்தான். எனக்கே, ‘நாம் கனவு காண்கிறோமோ!’ என்ற ஐயம் உண்டாயிற்று.

“அங்கே எனக்கு நடந்த உபசாரங்களை நான் முன்னே எங்கும் அநுபவித்ததில்லை. ஆகையால் அங்கே உள்ள பண்டங்களை எப்படி எப்படி உபயோகிக்கவேண்டும் என்பதே எனக்குத் தெரியவில்லை. அங்கிருந்த வேலைக்காரர்கள் அதையெல்லாம் எனக்குச் சொல்லித் தந்தார்கள்.”

நடுவிலே ஏழைப்பாணன் ஒரு கேள்வியைக் கேட்டான். “பானங்களை நுகர்ந்ததையும் ஆடை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/77&oldid=1232500" இலிருந்து மீள்விக்கப்பட்டது