பக்கம்:கரிகால் வளவன்.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

வர்கள். அவர்களுடைய குலத்திலே பெண் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டான் அவன். எந்த அரசன் வாழ்ந்தாலும் எந்த அரசன் வீழ்ந்தாலும் காவிரியின் நீர் வளத்தால் நெல் விளைவித்து நாட்டைக் காக்கும் வேளாளர் பெருமை நிலையானது என்பதை உணர்ந்தவன் அவன். ஆகவே, பலரோடும் ஆராய்ந்து அழுந்துாரில் வாழ்ந்த பெரிய வேளாண் செல்வர் ஒருவருடைய அழகுத் திருமகளை மணம் செய்து கொண்டான். இளஞ்சேட்சென்னிக்கு வாழ்க்கைத் துணைவியாகிய மகளைப் பெற்றுத் தந்தவர் பெயர் நமக்குத் தெரியாது. அழுந்துார் வேள் என்று கெளரவமாக யாவரும் அவரை வழங்குவர்.

வீரமும் கொடையும் இன்ப வாழ்வும் நிரம்பிய சேட்சென்னியிடம் அரசுக்குரிய எல்லா உறுப்புக்களும் இருந்தன. பல பல தேர்கள் இருந்தன. அந்தப் புகழ் அவனுடைய பெயரோடு ஒட்டிக் கொண்டது. ‘உருவப் பல்தேர் இளஞ்சேட்சென்னி’ என்று நீட்டி முழக்கி அவன் பெயரைப் பாட்டில் வைத்துப் புலவர்கள் பாடுவாராயினர்.

அத்தகைய இளஞ்சேட்சென்னி நோய்வாய்ப்பட்டிருக்கிறான். குடி மக்களின் சிறப்பைத் தன் திருமணத்தால் உலகுக்குக் காட்டிய அவனிடம் அவர்களுக்கு இருந்த அன்புக்கு அளவுகடற முடியுமா? கடவுளே! எங்கள் மன்னர் பிரான் நோய் நீங்கிப் பழையபடியே வீரம் விளைக்கும் வலிமை உடையவனாக வேண்டும்” என்று வேண்டினர். ‘மன்னனுக்கு ஏதேனும் நேர்ந்து விட்டால் என் செய்வது’ என்று நினைக்கும்போது