பக்கம்:கரிகால் வளவன்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

79


பாட்டை இயற்றி முடித்தார். 301 அடிகளைக் கொண்ட அந்தப் பாட்டு, காதலன் ஒருவன் சொல்வதுபோல அமைந்திருக்கிறது. இல்லறம் நடத்துவதற்கு வேண்டிய பொருளைத் தேடும் பொருட்டுத் தன் காதலியைப் பிரிந்து செல்லலாம் என்று முதலில் அவன் நினைக்கிறான். பிறகு அவளைப் பிரிவது துன்பத்தைத் தரும் என்ற எண்ணம் உண்டாகிறது. அப்போது தன் நெஞ்சைப் பார்த்து, “காவிரிப்பூம்பட்டினத்தைப் பெற்றாலும், கரிகாலனுடைய வேலைக் காட்டிலும் வெம்மையான பாலை நிலத்தைக் கடந்து நான் வரமாட்டேன்; என்னுடைய காதலியின் தோள் அம் மன்னனுடைய செங்கோலை விடத் தண்மையை உடையது” என்று சொல்கிறான். இப்படிச் சொல்லும் போக்கில் காவிரிப்பூம்பட்டினத்தின் பெருமையையும், கரிகாலனுடைய புகழையுமே புலவர் விரித்துரைக்கிறார்.

சுக்கிரன் வடக்கே இருந்தால் மழை பொழியும் என்று சொல்வார்கள். அது தெற்கே சென்றால் மழையின்றிப் பஞ்சம் உண்டாகும். அவ்வாறு பஞ்சம் உண்டாகி, வானம்பாடி வானத்தை நோக்கி மழைத்துளிக்காக வாய் திறந்து பாடியும் நீர் கிடைக்காமல் அது வாடும்படி பஞ்சம் உண்டானாலும் பொய்யாமல் குடகு மலையிலிருந்து வருகின்ற காவிரி தன் நீரைப் பரப்பிப் பொன்னைக் கொழிப்பது சோழநாடு. அந்த நாட்டில் என்றும் விளைவு அருத வயல்கள் பரந்திருக்கின்றன. சிறிய சிறிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/85&oldid=1232508" இலிருந்து மீள்விக்கப்பட்டது