பக்கம்:கரிகால் வளவன்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

93

“ஓடாதே, ஓடாதே! நான் ஆட்களை அனுப்புகிறேன்” என்று கரிகாலன் கூவினான். அவள் காதில் அது விழவில்லை.

அரசனுடைய பணியாளர்கள் ஆதிமந்தியை அணுகிச் சமாதானம் சொன்னார்கள். “இதோ பரிசல்களையும் தெப்பக் கட்டைகளையும் போட்டுக் கொண்டு இளவரசரைத் தேட ஏற்பாடு நடைபெறுகிறது. வெகு வேகமாகத் தேடிக் கண்டு பிடித்து விடலாம். நீங்கள் அலையவேண்டாம்” என்றார்கள். “நான் மாட்டேன். அவரைக் கண்டு பிடிக்காவிட்டால் அவர் போன வழியே நானும் போகிறேன். இரண்டு முறை புறப்பட்டும் தடை உண்டாயிற்றே. அதை இந்தப் பாவி உணரவில்லையே!” என்று அவள் புலம்பினாள். நில்லாமல் கரைவழியே ஓடினாள். புதிதாகப் போட்ட கரை ஆகையால் தடையில்லாமல் ஓட முடிந்தது. குதிரை யேறிய சிலர் அவளுக்குப் பாதுகாப்பாக உடன் போனார்கள். அவளை யாராலும் தடுக்க முடியவில்லை.

ஆட்டனத்தியின் உருவம் இப்போது மறைந்துவிட்டது. குதிரையின்மேல் ஏறி முன்னே சென்றவர்களுக்கும் புலப்படவில்லை. ஆற்றுக்குள்ளே பரிசலை விட்டுச் சென்றவர்களுக்கும் கிடைக்கவில்லை. வெள்ளம் இரு கரையையும் தொட்டுச்சென்றது. அந்த ஆற்றில் எங்கே என்று தேடுகிறது? ஆனாலும் தேடினார்கள். பல இடங்களில் தேடினார்கள். அரசகுமாரன் அகப்படவில்லை.

ஆதிமந்தி போய்க்கொண்டே இருந்தாள். “தாயே, காவிரி மகளே! என் கணவனை விழுங்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/99&oldid=1232518" இலிருந்து மீள்விக்கப்பட்டது