பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 97

அம்மா யாரோ பெண் பிள்ளையை நினைத்துக் கைகளை நெறித்துச் சாபமிட்டாள். திரும்பி வரும் போது... | ச்சையம்மன் கோயில் நவராத்திரிச்சீர் பொங்கல் வைக்கப் பெண்களெல்லாரும் கூடியிருந்தார்கள். பாட்டுப் போட்டிருந் தார்கள். ராமசாமிக்கு அப்போதெல்லாம் சினிமாப் பாட் டென்றால் உயிர். அம்மா, கர்ப்பூரம் வாங்கிக் கொளுத்தி வைத்தாள். விழுந்து விழுந்து கும்பிட்டாள். நம்பிக்கை புடன் வீடு திரும்பினார்கள்.

காலையில் அவன் ஏழுமரிைக்கு வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருக்கையில் சண்முகக் கங்காணியும் கணக்கப் பிள்ளையும் அவர்கள் குடிசைக்கு வரக் கண்டான். அம்மா பரபரத்துக் குடிசைக்குள்ளிருந்து வெளிவந்து பார்த்தாள்.

மக்கா...!” என்ற கங்காணி கண்களைத் துடைத்துக் கொண்டார்.

கடற்கரையில் அப்பச்சியின் உடல் ஒதுக்கப்பட்டிருந்தது. மீன்கள் கண்களைக் கொத்தியிருந்தன. -

அவர் இறந்தபோது அவர்களுடன் இருந்து உண்மை யாகக் கண்ணிர் வடித்தவர் சண்முகக்கங்காணி தாம்.

அப்பா திரும்பி வந்தபின் நன்றாக உடல் தேறிப் பழைய வலிமையைப் பெற்றிராத போனாலும், அன்பும் அரவணைப் புமாகச் சில நாட்களேனும் அவர் இருந்திருந்தால் அவருடைய இழப்பை ராமசாமியும் தாயும் அதிகமாக உணர்ந்திருப் பார்கள். ஆனால், அப்படி எதுவும் இல்லாமல் அவர் திரும்பியதும், இறந்து போனதும் கனவில் நிகழ்ந்த் சம்பவங் களாக நினைவில் ஆழமாகப் பதியாமல் போய்விட்டது. ராமசாமியின் வாழ்க்கையை அந்த நிகழ்ச்சி அப்போது பாதிக்கவில்லை.

சண்முகக் கங்காணிக்கு நீர்க்கோவை, வாதம் வந்து அவரைப் படுக்கையில் தள்ளிவிட்டது. அவருடைய தம்பி மகன் ஒருவன் துாத்துக்குடிச் சந்தையில் கடை வைத்திருக்