பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 99

“...நீங்க. யாரு...?’ - ‘ எம்பேரு தெரியுதா? தனபாண்டியன்னு...’ அவன் கேட்டிருக்கிறான். தொழிலாளர் சங்கத்தின் ஒரு தலைவராக அவருடைய பெயர் பிரபலமாகிக் கொண் டிருந்தது. ஒருவேளை அப்பச்சியைத் தெரிந்திருக்குமோ?.

“நான் சாத்தப்பன் மகன்...’ “அதா, ஒங்கப்பா முகம் அப்படியே இருக்கு. வீட்டில: அம்மா சுகமா? தங்கச்சியக் கட்டிக் குடுத்தாச்சா...’

அவனுக்குக் குழப்பமாக இருந்தது. “தங்கச்சி இல்ல. எறந்து போச்சு...’

‘அடாடா...’ என்றவர், அவன் தகப்பனார் தொழி லாளர் சங்கம் தழைக்க எப்படியெல்லாம் பாடுபட்டார் என்று சொல்லிக் கொண்டே அவனுடன் நடந்தார். உண்மையில் செல்வாக்குடன் அவர் தொழிலாளரை ஒன்று சேர்த்ததே முதலாளிக்குப் பிடிக்காமல், அவர் மீது சதிக்குற்றம் சுமத்திச் சிறையில் தள்ளினார்கள். இப்போது, உப்பளத் தொழி லாளரை மீண்டும் ஒன்று சேர்த்து, அவர்களுக்கு ஒரு நல்ல. சங்கத்தை அமைக்க முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்றெல்லாம் எடுத்துரைத்தார்.

வாயிலில் சைக்கிளை வைத்துவிட்டுக் குனிந்து அவரும் குடிசைக்குள் வந்தார்.

“அம்மா ஒங்களப் பாக்க ஒராள் வ்ந்திருக்கு’ அம்மா சிறு சிம்னி விளக்கைப் பொருத்தினாள். “அண்ணி, எப்படிப் போயிட்டிய? என்ன காபகம் இருக்கா?...’ என்று நெகிழ்ந்த குரலில் வினவினார்.

அம்மா சங்கடத்துடன், “இல்லாம என்ன...” என்று திடீர்த் துக்கத்தை வரவழைத்துக் கொண்டு கண்களை முன்றானையால் துடைத்துக் கொண்டாள்.

‘தனபாண்டியம்மா, அவரு பெரிய தலைவர், எவ்வளவு: பாடுபட்டார்? இந்தத் தொழிலாளிகள் ஒண்ணு சேரனும்: