பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IOO கரிப்பு மணிகள்

அவர்களை அழுத்தும் முதலாளித்துவத்தைத் தட்டிக் கேட்க ஒரு நாக்கு வேணும்னு அவர் பாடுபட்டு உயிரையே பணயம் வச்சிட்டா. அண்ணி, நா இன்னிக்கு உயிரோட உங்கமுன்ன வந்து நின்னு பேசுறேன்னா, அது அன்னிக்கு நீங்கைாட்டின கருணையாலதான். போவீக என்னைக் கண்ணிவச்சுத் தேடினப்ப, அடுப்புவச்ச எடத்துல பலகைபோட்டு துணியப் போட்டு என்னப் படுக்கச் சொல்லி அண்ணனும் நீங்களும் எடங்கொடுத் தீங்க, ஒங்க சோறும் உப்பும் தின்னு மூணு நாள் இருந்தேன். அதெல்லாம் எப்படி மறக்கும்?’ என்று கண்ணிர் வடித்தார்.

அம்மா எங்கோ முகட்டைப் பார்த்தாள். எனக்கு ரொம்ப விசனமான விசயம், சாத்தப்பன் தற்கொலை செஞ்சிட்டான், புத்திசா தினமில்லைன்னு சொல்லிக்கிறாங் களே, இதுதான் புரிய.ை இதில ஏதோ மருமம் இருக்குன்னு படுது. நீங்க அன்னிக்கு என்ன நடந்ததன்னு வெவரமாச் சொல்லணும். கம்மா விட்க்கூடாது இதை...” என்றார்

தடுபாண்டியன்.

நடந்த ஐந்து வருஷங்களுக்குப் பிறகு இப்போது இதை இவர் ஆராய வந்திருப்பதன் நோக்கம் என்ன என்று ராமசாமி முதலில் திகைத்தான்.

‘தொழிற்சங்கத்தை இப்ப பலப்படுத்தணும். இப்ப உப்பளத்தொழில் மின்னவிடவும் கஷ்டம். இந்தப் பனஞ் சோலை அளம் எவ்வளவு பெரிசாப் போச்சு? முன்ன அந்தக் காலத்துல துலாவச்சு அடிச்சா. அஞ்சு பாத்தி ஆறு பாத்தி ஒரு மனுஷன் வாருவான். இப்ப, மிசின் தண் ணியை எரச்சுக் கொடுத்து. அதே ஒரு ஆள் முப்பத்தஞ்சி பாத்தி வாருறான். கூலி அந்த அளவுக்கு உசந்திருக்கா?’ என்று கெட்டித்துப் போன உப்பை உதைத்து உலுக்குவதுபோல் கேட்டார்.

கலகலவென்று அது குறைபாடுகளாக அப்போதுதான் ராமசாமிக்கு உறைத்தது.