பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 கரிப்பு மணிகள்

தனபாண்டியன் அன்று அதற்குமேல் பேசவில்லை.

ஆனால் அவர் சென்றபின் அம்மா அவனிடம், “மக்கா; தெளிஞ்சுகெடக்கிற மனசை அவெ குட்டத் தண்ணியாக் இடுவா. இப்பிடித்தே காயிதமும் அதும் இதும் கொண்டுப்

போவாக, ராவோட ராவா மீட்டங்கி பேசும்பாவ. அங்கமுத்துன்ற அந்தாளு கூடதா இவ வருவா. இவயெல் லாம் வாரதுக்குமுன்ன, உங்கய்யா, அவர் சோலியுண்டு

அவருண்டுண்ணுதா இருந்தா. இவல்லாம் விடமாட்டா. சொதந்தரம் வந்து ஆருக்கென்ன? முதலாளியளுக்குத்தா சொதந்தரம்பா...கடோசில என்ன ஆச்சி? இவியளத் துண்டிட்டு உள்ள போக வச்சிட்டு, அவனுவ தப்பிட்டாக மக்கா. நீ இவியக் கூடச் சிநேகம் ஒண்னும் வச்சுக்காத, வேண்டாம்.’

எலும்புகள் முட்ட, எண்ணெய்ப் பசைகன்றிச் சுக்காயி வறண்ட தோலில் கீறல்களுடன் அம்மா கெஞ்சிய போது ராமசாமி குழைந்து போனான். கடலலை மோத வருவது போலும், அவன் விவரமறியாக் குழந்தையாக எதிரிட நிற்பது போலும் அவள் அஞ்சி அவனைப் பற்றிக் கொள்ளப் பார்த்தாள்.

ராமசாமி அப்போது கேட்டான்.

அந்தப் பொம்பிளன்னாரே அவரு. அது ஆரு அம்மா’ அம்மா அவனைத் திரும்பிப் பாராமலே பதிலளித்தாள்” *அவ ஆரோ. நமக்கும் அவளுக்கும் ஒரு தொடிசுமில்ல. நீயாரும் பேசுறதக் கேக்கண்டா. நமக்கு உள்ளது போதும்’ நல்ல பெண்ணா ஒனக்குக் கட்டி வய்க்கணும்...’

அம்மா அப்படித் தீர்த்துவிட்டாலும் அவனால் ஒதுங்கி விடுபட்டுவிட முடியவில்லை. உப்பைக் கக்கி விட்டு வரும் நஞ்சோடை நீரும் கரிப்பாகத் தானே இருக்கிறது?

ராமசாமியிடம் சாடைமாடையாக அக்கமும் பக்கமும், தொழில் செய்யும் இடங்களிலும் அத்தப் பொம்பிளை'யைப்