பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் I03

பற்றிச் செவிகளில் போடத்தான் செய்தார்கள். ‘அந்தப் பொம்பிளை’, அவனுடைய தந்தையின் கையைப்பற்றி மனைவியாக வந்தவள். மிக அழகா இருப்பாள்.

அப்போது பெரியமுதலாளி சிறுவயகக்காரர்...அவ்வளவு தான். அப்பாவின் முகத்தில் பிறகு அவள் விழிக்க வில்லை...

ராமசாமி படிப்பகத்தில் வந்து பத்திரிகைத்தாளைப் புரட்டிக் கொண்டே இருக்கிறான். படித்தது எதுவுமே மண்டையில் ஏறவில்லை.

பொன்னாச்சியின் முகமே வந்து கவிகிறது. அன்று தம்பி உடம்பு சரியில்லை என்று வேலைக்கு வரவில்லை. அவள் மட்டும் காத்திருந்தாள்.

அவளைத் தனியே கண்டதும் விழிகள் கலங்கித் துளிகள் உதிர்ந்தன. அவன் பதைத்துப் போனான்.

“ஏவுள்ள? என்ன?” அவள் முந்தானையால் துடைத்துக்கொண்டு விம்மி -னாள். o

“அந்தக் கண்ட்ராக்டுச் சவம். என்னியக் கெருவுச் சிட்டே இருக்கா எனக்கு பயமாயிருக்கு...இன்னிக்கி...”

“இன்னிக்கு...’

அவனுக்கு நெஞ்சு துடிக்க மறந்து போயிற்று.

“அவனைக் காலத்துக்கி ஒதுச்சிட்ட, விரிசாப் போடி’ன்னு தொட்டுத் தொட்டுக் கிள்ளினா; பொக்குனு ஆத்திரத்தோட ஒதச்சிட்ட. ஆரும் பாக்கல. ஆனா என்னேய்வானோன்னு பயமாயிருக்கு.”

அவன் விழிகளைக் கொட்ட மறந்து போய் நின்றான். ஏத்தா? ஒம்பேரென்னன்னு சொன்ன?” - அவளை வெட்கம் கவிந்து கொள்கிறது. “என்ன சேஞ்ச?...சொல்லே...!”

அவள் கதகதத்த பட்டுத்துண்டுக்குள் புதைந்தாற்போல் நிலத்தைப் பார்க்கிறாள்.