பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 கரிப்பு மணிகள்

“ஒம் வாயால சொல்லுவுள்ள, காலத்துக்கி அவன ஒதச்சே...சரிதானா? கால்ல ஒலச்செருப்புப் போட்டிருந்: தல்ல?” -

‘ம்...’ என்று தலையை ஆட்டுகிறாள் பொன்னாச்சி. “அது நா ஒதச்சப்ப அவமேல பட்டு கீளவுழுந்திற்று...’

‘எங்காது குளுந்திருக்கு எப்பிடி, ஒதச்சன்னு காட்டுவியா பொன்னாச்சி...?”

அழுகை போய்ச் சிரிப்பு வருகிறது. அது மலர்ப்பாதம், எலும்பு முண்டி நரம்பெடுத்து முழித்துப் பார்க்காத பாதம். உப்பு அவள் பாதங்களில் படிந்து மென்மையைக் குத்திக் கிளறினாலும், அவள் உயிர்த்துவமுள்ள மனிதப் பெண். உப்பு அவளைப் புழு, வாக்க, முதுகெலும்பைத் தின்றுவிடவில்லை. அவள் வீறு கொண்டு ஒரு அசுரனை உதைத்தாள்!

அந்தக் காலைப் பற்றி முத்தமிட வேண்டும் போலி ருந்தது, ராமசாமிக்கு.

“அவெ கருவச்சிருக்க மாட்டா? அவெ அக்குரமத்துக்கு நா எடங்குடுக்கலன்னுதா ரொம்ப வருமங்காட்டறா...’

“அது சரி, நீ ஒதச்சபெறவு அவ என்ன சேஞ்சா? மீசல. மண்ணத் தட்டிட்டுப் போனானா?’ என்று அவன் சிரித்தான்.

“நீங்க சிரிக்கிறிய, இவிெ, இப்படியிருக்காண்ணு

மொதலாளிக்குத் தெரியுமா! அவியக்கிட்ட சொன்னா

என்ன?’’

“பொன்னாச்சி, இப்பிடி அக்குருமமுன்னு. மொதல்ல கொரல் குடுக்கறதே நீதான்! எல்லாரும் இவனுவ என்ன சேஞ்சாலும் எதுக்கத் தெரியாம அடங்கிப் போவா. பவருள்ளவ சேட்டசேஞ்சா அது லாவம்னு அடங்கிப். போற பொண்டுவளத்தா இதுவரய்க்கும் நா கேள்விப் பட்டிருக்கே, பாத்துமிருக்கே. நீ...நீதா தயிரியமா எடுத்து சொல்ற. ஏ அழுற? சிரிக்கனும், நா ரொம்ப சந்தோசப்