பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 105

படுற, ஒனக்கு ஒண்ணும் வராது... நமக்கெல்லா நல்ல காலம் வரப்போவுது. அதுக்கித்தான் ஒனக்கு அந்தத் தைரியம் வந்திருக்கு ...”

‘அப்ப நா பயப்படாண்டாம்...’

“நிச்சயமா. நா இருக்க, வுள்ள, ஒங்கிட்டச் சொல்ற, எனக்கு வீட்டுக்குப் போனாக்கூட ஒன் ஞாபகமாகவே இருக்கு இத்தே பெரிய அளத்துல, நீ இருக்கிற பக்கமே நா சுத்திவரான்னுகூட அவங்கண்டிட்ருப்பா. நீ பயப்படாத நானிருக்க...எப்பவும்...”

trrruderitis) இந்த உரையாடலை நூறுமுறைகள் உயிர்ப்பித்துப் பார்த்து மகிழ்ந்திருப்பான். இன்னும் அலுக்க வில்லை. சினிமாக் காட்சிகளுக்கு அவன் எப்போதேனும் செல்வதுண்டு. கதாநாயகியை வில்லன் துரத்தி இம்சை செய்வான். சரேலென்று கதாநாயகன் குதிரை மீதேறித் தாவி வந்து அவன்முன் குதிப்பான்; உறைவாளை உருவி, அந்தக் கொடியவனுடன் கத்திச் சண்டை செய்வான். அவன் தலை உருளும். கதாநாயகி ஆனந்த மிகுதியால் கதாநாயகனின் அருகில் வந்து மலர்ச் செண்டென.அவன் மார்பில் முகம் பதிப்பாள்...ராமசாமி , தானே அந்தக் கதாநாயகனாக மாறிப் போகிறான். நாச்சப்பனின் தலை உருண்டு கிடக்கிறது. பொன்னாச்சி...பொன்னாச்சி...

யாரோ அவன் கையிலிருக்கும் பத்திரிகையை உருவவே அவன் திடுக்கிட்டு நிமிருகிறான். -

தனக்குள்ளே நானியவனாக, பிறகு சமாளித்துக் கொள்கிறான்.

9

அன்று சனிக்கிழமை, கூலிநாள். கிழிந்து பிளந்து விட்ட பனஒலை மிதியடியைத் தூக்கி எறிந்துவிட்டு நஞ்சோடை நீரில் கால்களைக் கழுவிக் கொண்டு ரப்பர்.

-7