பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I06 கரிப்பு மணிகள்

செருப்பை மாட்டிக்கொண்டு பொன்னாச்சி கூலிக்கு திற்கிறாள். அன்று தம்பி பச்சை வேலைக்கு வரவில்லை. அவனுக்கு காலில், கையில் வாயில் புண், காச்சல் வேறு கதகதப்பாக இருந்தது. அழகு, வடிவாம்பா, மாரியம்மா, எல்லோரும் நிற்கின்றனர். ராமசாமியை அன்று சாப்பாட்டு நேரத்துக்குமேல் காணவில்லை. தம்பிக்குக் காய்ச்சல், வாயில் புண் என்று சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த் திருந்தாள். கூலி கொடுக்க நேரமாகிவிட்டால் தேரிகடந்து தனியாக்ப் போகவேண்டி வருமோ என்றஞ்சியே அவனை எதிர்நோக்கியிருந்தாள். சாப்பாட்டு நேரத்தில் அவன் நல்ல தண்ணியில் கால் கழுவிவிட்டு, மருதமுத்துக்கங்காணியுடன் பேசிக்கொண்டே போனான். அவளைப் பார்க்கவில்லை. இப்போதும் அவள் கண்ட்ராக்ட் நாச்சப்பன் கூலி கொண்டு வருவதை மட்டுமின்றி ராமசாமியும் எந்தப் பக்கமிருந்தேனும் வருகிறானா என்று பார்த்துக் கொண்டிருக்கிறாள். நாச்சி யப்பன் கூலியைக் கொண்டு வருகிறான், இருபத்து நான்கு ரூபாய் அவளுக்கு வரவேண்டும், இரண்டு நாட்கள் அதிகப் படியே வேலை செய்திருக்கிறாள். ஆனால் ஆறு ரூபாயைப் பிடித்துக்கொண்டு பதினெட்டு ரூபாய் கொடுக்கிறான். எண்ணி எண்ணிப் பார்க்கிறாள். மாரியம்மாளுக்கு, அழ காம்பாளுக்கு, முனுசாமிக்கு, மாயாண்டிக்கு, யாருக்கும் குறைக்கவில்லை. அவளைப் போல்தான் அவர்களும் வேலை செய்தார்கள்.

நாச்சப்பன் கூலியை அவளிடம் கொடு த் துவிட்டுப் போய்விட்டான். s

‘அண்ணாச்சி? எங்கூலியை ஏன் கொறச்சிட்டாங்க?”

“ஏங்கொறச்சிட்டா?.” அவன் சிரித்துவிட்டுச் செல் கிறான்.

“மாரியக்கா? கண்ட்ராக்ட்டு எங்கூலிய ஏங்கொறச் சிட்டா?"