பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிப்பு மணிகள்

1

உத்திராயனத்துச் சூரியன் உச்சிக்கு நகர்ந்து செங் கதிர்க் குடை பிடிக்கிறான். தெற்குச் சீமையின் கடற் கரையோரங்களில் விரிந்து பரந்து கிடக்கும் உப்பளங் களில் இன்னோர் புத்தாண்டு துவக்கமாகி விட்டது: இட்ட தெய்வங்களின் மேலாடை களைந்து பரிமளதைலம் பூசி நீராட்டுவது போல் மண் அன்னையின் ‘அட்டு நீக்கி, பதமான களியும் மணலும் விரவி நீரைக்கூட்டி, செய் நேர்த்தி செய்யும் கோலங்கள் கடற்கரை நெடுகிலும் ஏக்கர் ஏக்கராக விரிந்த உப்பளங்களில் காட்சிகளாக விரிகின்றன. ==

தைச்சிரி’ கழித்து, பொன்னின் கதிர்களறுத்துக் களத்து மேடுகளில் நெல்மணிகளை உழவர் பெருமக்கள் குவிக்கும் அக்காலத்தில், ஆற்றோரத்து விளைநிலங்களில் மண் அன்னை பிள்ளை பெற்ற தாயாக மகிழ்ந்து காட்சி யளிக்கிறாள். மீண்டும் மீண்டும் பசுமையில் பூரித்துக் கொழித்து இயற்கையில் மலரும் அன்னையாக உலகை உய்விப்பாள்.

ஆனால், இந்தக் கடற்கரை யோரங்களில், பூமித் தாயின் பசுமையை அழித்து, உலகெங்கும், உயிர்க்குல மனைத்துக்கும் சாரமளிக்கும் கரிப்பு மணிகளை விளை விக்கச் செய்நேர்த்தி செய்கிறார்கள். வானின்று பொழி யும் காருக்குப் போட்டியாக, பூமிப்பெண்ணை என்னா லும் தாயாக்க இயலும் என்று கடலோன் பூமிப்பெண் னின் உதரத்தில் தங்கி அவளை அன்னையாக்குகிறான். நல்லார் பொல்லாரென்ற சூதறியாத வானவனோ எல்

க-1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/11&oldid=657260" இலிருந்து மீள்விக்கப்பட்டது