பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 பரிப்பு மணிகள்

யாக இருக்கலாகாதா என்ற ஆசை அடித்துக் கொள் கிறது.

சாலையில் சைக்கிள்கள் போகும்போது சட்டென்று: அதிலிருந்து அவன் இறங்கி அவளைக் கண்டு கொண்டு வர ‘மாட்டானா என்று பார்க்கிறாள்.

யாருமில்லை. ராமசாமி வரவில்லை, பாலம்...பாலம் வந்ததும் அவள் குறுக்கே தேரிக்குள் திரும்ப வேண்டும். அங்கும் யார் யாரோ மக்கள் செல்கின்றனர். ‘முருகா... முருகா...’ என்று மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டு பொன்னாச்சி தேரிக்குள் நடக்கிறாள்.

பேச்சுக் குரல்கள் தேய்ந்தாற்போல் விழுகின்றன. அவளுடன் வேலை செய்யும் பெண்கள் பத்துப் பதி னைந்து பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருத்திகூடக் கூலிக் குறைப்பைக் கருதி அனுதாபமாக அந்த கண்ட்ராக் டிடம் கேட்கலாம் என்று வரவில்லையே? *

“நீ தணிச்சு ஒரு வழி போகனுமே” என்றும் ஒருத்தியும் வாய்ச் சொல்லுக்கும் கூட கூறவில்லையே? இந்த உப்பு: சூட்டில் முள்ளுச் செடிகள் கூடக் கரிந்து விடுகின்றன. ஊரில் மாமி ஏசுவாள் என்றாலும் அடிக்கொருமுறை பொன் னாச்சியை யாரேனும் கூப்பிடுவார்கள். மனித நேயங், களனைத்தும் உப்புச் சூட்டில் வறண்டு போய் விடுமோ?

ராமசாமி சங்கம் கூட வேண்டும், எல்லோரும் ஒற்றுமை யாக நிற்க வேண்டும் என்று ஒரு நாள் சொன்னான். இப்போது அவனே அவளுக்கு உதவ வேண்டிய சமயத்தில் போய்விட்டான்.

செம்மணல் பரந்த மேடாகத் தெரியும் தேரி இப்போதும் இனம் புரியாமலிருக்கிறது. குடல் குலுங்க அவள் இருட்டில் ஒடுகிறாள். யார் யாரோ ஆண் குரல்கள் கேட்கின்றன.

தேரியில் வைத்துக் கொலை செய்து விட்டார்கள் என்ற சொற்றொடர் உட் திரையில் மின்ன முருகா, முருகா என்று நா உச்சரிக்க அவள் ஒடுகிறாள். அப்போது