பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IIO கரிப்பு மணிகள்

“மிேருவமே என்னக் கொன்னு போட்டுறதுதானே?” மீண்டும் அவள் அழுகையொலி அங்கு எதிரொலிக்கிறது. “இப்படிப் பண்ணிப்போட்டியே? நா எப்பிடி எல்லார் மூஞ்சிலியும் முழிப்பே?” -

‘த, இப்ப என்ன வந்திற்று ? நா ஒன்னக் கல்யாணங் கட்டுற, சில, தாலி வாங்கித்தார? இந்த மொத்த ஊரிலும் தண்ணிக்குள்ள கெடந்து மிசின் மாட்டுற தொளில் ஆருக்கும் வராது. மொதலாளி பெசலா எனக்குண்டு குடிய்க்க நெதம் ரெண்டு ரூவா தருவா...அழுவாத...?”

இதுதான் விதியா? இந்தக் குடிகாரனை அவள் கல்யாணம் கட்டுவாளா? மாமி, சின்னாச்சி, அப்பன்... பச்சை... “ஐயோ, அவுரு...எப்பேர்க் கொத்த மணிசரு?”

பொங்கிப் பொங்கி அழுகை வருகிறது. ‘தே அழுவாதவுள்ள...” அவன் குரலில் ஆணவமோ, ஆத்திரமோ இல்லை. தாய்க்குத் தெரியாமல் கள் குடித்து விட்டு வரும் பிள்ளை, *தெரியாம செஞ்சிட்டேன்’ என்று தண்டனையை ஏற்க நிற்பவன் போல் கெஞ்சுகிறான்.

  • அநியாயமா இப்பிடிச் செஞ்சிட்டியே, பாவி, நா ஒன்னயா கலியாணம் கெட்டிக்கணும்? துர!...’ “பின்ன வாணாமுன்னா வாணா...” உடலும் மனமும் பற்றி எரிகிறது. அவனை என்ன செய்யலாம்? அப்போது அடித்துக் கால் கையை வெட்டிப் போடலாமா? அப்போது அவள் எரிச்சல் ஆறுமா?... ஐயோ...! என்று அவள் துடிதுடிக்கிறாள். - “என்னியக் கொன்னு போட்டுட்டுப் போ. சவமே ஏன் நிக்கே?*

“ஐயோ....கொல எல்லாம் செய்யமாட்டே. இப்ப என்ன வந்திற்று? எல்லாப் பொம்பிளக்கும் எல்லா ஆம்பிளய்க்கும் உள்ளது.தே. எந்திரிச்சி, சிலயல போட்டுக்க. கண்ணத் தொடச்சிட்டுவா. கிளப்பில தோசையும் குருமாவும் வாங்கித்