பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 111

தாரன்; சாப்பிட்டுக்க. அளத்துல லாரி வந்திச்சி, நேரமாச் கன்னு சொன்னா ஆருங்கேக்க மாட்டா. ஒங்க விட்டில நா கொண்டுவுடுறே. a. * -

அவன் அவள் சிலையை எடுத்து மேலே போடுகிறான்: கைபிடித்து எழுப்புகிறான். i.

‘ந்தா நாச்சியப்ப கன்ட்ராக்ட், கங்காணி ஆறுமுகம் கணக்கவுள்ள பிச்ச...அல்லாரும் பொறத்தியான் பெஞ்சாதி யளைக் கை தொடும் கழுவேறியா நா அப்படிப் பாவம் செய்ய மாட்ட, சாமி அப்பேர்க் கொத்தவங் கன்ன அவிச்சிப் போடும். நான் கண்ணாலங்கெட்டாத பொண்ணாத்தாத் தொடுவ...”

அவனுடைய சிலநெறியைச் செவியேற்கையில் அந்த திலையிலும், அவளுக்கு சிரிப்பு வரும் போலிருக்கிறது.

‘நீ கலியாணம் கெட்டலியா?” ‘அக்கா மவளக் கெட்டின, அதுவுள்ள பெத்த ஆசிபத் திரில செத்துப் போச்சி. இப்ப ஒன்னக் கட்டிக்கற என்னக் கட்டிக்கிறியா பொன்னாச்சி?”

‘'நீ என்னக் கட்டிக்கிறேன்னு கவுறு போட்டா, நாங் கடல்லவுழுந்து முடிஞ்சி போவ...’

“ஐயோ அப்ப வாணா, நீ என்னக் கட்டிக் காட்டி வாணா! நீ ராமசாமியக் கட்டிக்க...’ -

அந்தப் பெயரைக் கேட்கையிலே மீண்டும் துயரம் வெடித்து வருகிறது. இது தெரிந்தால் அவர் என்ன சொல் வார்? காவலிருக்கேன்னு சொல்லிக் கைவிட்டு விட்டீரே!

‘'நீ அழுவாத பொன்னாச்சி. நா தெரியாம செஞ் சிட்டா. வா. ஒனக்கு அஞ்சு ரூவா இல்லாட்டி பத்து ருவா தாரவா...’

அவன் கையை உதறிக் கொண்டு அவள் எழுந்து சிலையை இறுக்கிக் கொள்கிறாள். அலுமினியம் தூக்கை வாங்கிக்கொண்டு அவள் நடக்கிறாள், தொய்யும் கால்களை உறுதியாகப் பதித்து நடக்கிறாள். கரிப்புத் தண்ணிர் உதடு களை நனைக்க அவள் நடக்கிறாள்.