பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II 2 கரிப்பு மணிகள்

தேரி கடந்த பின் தெருவோரம் ஒரு நைட் கிளப்பில் எண்ணெயில் வட்ட வட்டமாக பூரி காய்கிறது. ஆட்கள் அங்கே உட்கார்ந்து தீனி தின்கின்றனர்; நின்று காபியோ தேநீரோ பருகுகின்றனர்.

“பூரி தின்னுக்கறியா? நெல்லாருக்கும்...” !ே” என்று காரித் துப்புகிறாள், விளக்கொளியில் அவன் முகத்தைக் கண்டதும்.

  • ந்தாப்பா, ஒரு பாவசம் குடு...” பளிச்சென்ற ஒளியில் அவள் நிமிர்ந்து பார்க்கக் கூசி நிற்கிறாள். ஒரு பையன் கிளாசில் பாவசம் கொண்டுவந்து தருகிறான்.

“குடு.வாங்கிக்க...” பாசிப் பருப்பும் வெல்லமும் சேர்ந்த, பாயசம்”. அவள் கடையின் பின்பக்கம் இருளில் திரும்பி அந்தப் பாயசத்தை அருந்துகிறாள். பிறகு கொஞ்சம் நீர் குவளையில் வாங்கி முகத்தைக் கழுவிக் கொள்கிறாள். எரியும் தீயை அந்தப் பாயசம் இதமாய் அணைத்தாற்போல் தோன்றுகிறது.

  • வீட்டுப் பக்கம் வராண்டா. போயிடு. நாளக்கி எங்கனாலும் ஆரானும் பொம்பிள கடல்ல, கெணத்துல விழுந்திட்டான்னு செவில வுழுந்தா போயிப்பாரு.’

அவள் ஆத்திரத்துடன் நடக்கிறாள். அவன் கோயில் வரையிலும் அவள் சொல்வதைக் கேளாமலே தொடர்ந்து வருகிறான். பிறகு அவள் வெருட்டி யதால் செல்கிறான். சின்னம்மா, குழந்தைகள் எல்லோரும் வாயிலில் நிற்கின்றனர். -

“ஏட்டி’ என்று சின்னம்மா கேட்கும் வரையிலும் அவள் காத்திருக்கவில்லை. தூக்குப் பாத்திரத்தை அவள் கையில் கொடுத்து விட்டு உள்ளே சென்று வாளியும் கயிறுமாகக் கிணற்றடிக்கு விரைகிறாள். கிணற்று நீரைச் சுறண்டி இழுத்துக் கொட்டிக் கொள்கிறாள். கோடைக்கால கிணறு மணலும் சேர்ந்து வருகிறது.

தனது கருமையை அந்த மணலோடு சேர்த்துத் தேய்த் துக் கழுவுவதுபோல் தண்ணிரை இரைத்து ஊற்றிக்