பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் II 5

காலையில் சின்னம்மாவின் கண்களில் முதலில் பொன் னாச்சி வரிகம்பில் உலர்த்தியிருக்கும் ரவிக்கைதான் படுகிறது. கைப்புறமும் முதுகுப்புறமும் தாறுமாறாகக் குத்தினாற்போல் கிழிந்திருக்கிறது. -

“ஏட்டி ஜாக்கெட் கிளிஞ்சிரிச்சா? கொம்பு மாட்டிச்சா? எங்க கிளிச்சிட்ட பதனமா அவுத்துக்கசக்குறதில்ல?”

“அது கிளியல...கிளிஞ்சிபோச்சி...’ என்று ஏதேதோ சொற்கள் மோதியடித்துக் கொண்டுவர உதடுகள் துடிக் கின்றன. கண்களில் முட்டிக் குளம் வெட்டுகிறது.

துாக்கிவாரிப் போட்டாற் போல் மருதாம்பா நிற்கிறாள். எழும்பும் நா அடங்கிப் போகிறது. கண்கள் அவள் மீது பொருளார்ந்து நிலைக்கின்றன.

10

நார்ப் பெட்டியும் கையுமாக பொன்னாச்சி, பாஞ்சாலி, சரசி, நல்லக்கண்ணு நால்வரும் சந்தைக்கு நடக்கின்றனர். குாயிற்றுக் கிழமைச் செலவு சாமான் வாங்க அவர்கள் வந்திருக்கையில் அப்பன் பச்சையை வைத்தியரிடம் அழைத்து சென்றிருக்கிறார். -

‘என்ன புள்ள மார்க்கட்டா?’ என்ற குரல் கேட்டுச் சிலிர்த்துக் கொண்டு அவள் திரும்பிப் பார்க்கிறாள்.

சைக்கிளில் ராமசாமி! தலையில் சுற்றிய துண்டை மீறி முடிக்கற்றை வழிய, ஒரு நீல சட்டையும் அணிந்து. ராமசாமி நிற்கிறான். அவன் கண்கள் சிவந்திருக்கின்றன. இரவு தூக்கமில்லை என்று அவன் முகம் பறையடிக்கிறது.

பொன்னாச்சிக்கு முகம் மலர்ந்தாலும் ஒரு கணத்தில் ஊசி பட்டாற் போல் குவிந்து விடுகிறது. பதிலேதும் பேசாமல் அவள் திரும்பி நடக்கிறாள், “இந்த ஆளை இப்ப யார் வரச் சொன்னது?” என்ற கோபம் அவளுள் துருத்திக் கொண்டு எழும்புகிறது.