பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 கரிப்பு மணிகள்

லோருக்கும் பொதுவாக காய்ந்து, மன்னை வெய்துயிர்க் கச் செய்கிறான். அவன் கொடையில் கரிப்பு மணிகள் கண் மலர்கின்றன.

விரிந்து பரந்த பாத்திகளுக்குச் செய்நேர்த்தி ச்ெய்யும் கால்கள் அனைத்தும் மனிதக் கால்கள். நீரும் களியும் மன லும் குழம்பிக் குழம்பி மனித ஆற்றலின் வெம்மைகளும் மண்ணின் உட்சூடும் கொதித்து ஆவியாகிப்போகும் “செப் நத்து” கருவைக்காட்டு உப்பளத்திலும் நடக்கிற = அந்தப் பாதங்கள் கறுத்துக் கன்றிப் புண்பட்டுத் தேய்ந் தாலும் இன்னும், ஆற்றலைக் கக்கும் இயக்கங்கள் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும்.

செறுக்கி மவளுவ...அழுந்த மெறியுங்க... சாமி யாரே7 ஆவட்டும்.” + - -

கங்காணியின் விரட்டல் கசையடிபோல் விழுந்து கொண்டே இருக்கிறது. இந்த அதட்டல்கள் அவ்வப் போது விழுந்து கொண்டே இருக்கவேண்டும். ஏனெனில் அங்கே பாத்தி மிதித்துப் பண்பாடு செய்யும் மேனிகள் இரத்தமும் சதையும் துடிப்பும் துள்ளலுமாக இல்லை. அமாவாசைக் கடலைப் போன்று ஆற்றலை அவர்களால் கொட்ட முடியாது. இறைத்து இறைத்து ஊற்றுக்கண் வற்றிய கிணறு. மேல் மழையோ அற்பம். சுரண்டினால் சிறிது நீர் பொசிந்து வரும். பிறகு நின்று.போகும். மீண், டும் வெட்டினால் சுருகருவென்று நீர் ஊறிவரும். அந்தப் பாத்தியில் எட்டுப் பேர் மிதிக்கிறார்கள்.

மருதாம்பா, மாரி, இசக்கி மூவரும் இளமையில் ஆளுகைக்கப்பால் அநுபவப்பாதையில் தேய்ந்து மெலிந்த வர்கள். இசக்கியின் மகளான பன்னிரண்டு. பிராயத்தி முத்தம்மா, மாரியின் மகள் லெச்சுமி, பையன் கந்தவேலு கைக்குழந்தையை நிழலில் போட்டுவிட்டு, மூன்து பிராயத்து முதற்குழந்தையைக் காவலுக்கு வைத்துவிட்டு அடிக்கொரு முறை அழுகையொலி கேட்கிறதா என்று பார்த்துக்கொண்டே மிதிக்கும் ருக்குமணி, ஆகியோரைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/12&oldid=657271" இலிருந்து மீள்விக்கப்பட்டது