பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 117

பாடிக் கொண்டிருக்கிறான். அவன் இன்னும் தோளோடு உராயும் அண்மையில் வந்து அரிசிக் கடையில் நிற்கிறான்.

“இப்ப ஏன் பின்னாடியே வாரிய? தொணயிருப்பேன்னு: சொல்லிட்டு வராம இருந்துட்டிய. பாவி குடிச்சிட்டு வந்து. தேரிக்காட்டுல கொலச்சிட்டு ப் போயிட்டா. இனி யாரும் யார் பின்னயும் வராண்டா...’

அந்த மெல்லிய குரலில் வந்த சொற்கள் சந்தை இரைச்சலின் எல்லா ஒலிகளோடும் கலந்துதான் அவன் செவி கனில் புகுகின்றன. ஆனால் அது எல்லா இரைச்சலுக்கும் மேலான பேரிரைச்சலாக அவனது செவிப்பறைகளைத் தாக்கி அவனை அதிரச் செய்கிறது. -

அவன்...அவன் மேட்டுக்குடி அளத்தில் சுமை துளக்கு கையில் முதுகெலும்பு அழுந்த நொடித்து விழுந்து ஒருவர் இறந்துவிட்டதாகச் செய்தி வந்ததைக் கேட்டு மாலையில் விரைந்து சென்று விட்டான். இருபது ஆண்டுகளாக அங்கே வேலை செய்யும் அந்த மனிதன் அளத் தொழிலாளி அல்ல என்று விசாரணையில் கூறப்பட்டு விட்டதைக் கேள்விப்பட்டு அவன் அங்கு சென்றான். தனபாண்டியன், அங்குசாமி போன்ற பல தொழிலாளர் சங்கத் தலைவர்களைப் பார்த்து விவரங்களை இப்போதும் . அதற்காகவே அவன் தன பாண்டியன் வீட்டுக்குச் சென்று கொண்டிருக்கிறான்.

“இனி யாரும் பின்ன வராண்ட வரத் தேவையில்ல தேவையில்ல...” என்றல்லவா சொன்னாள்! -

அவன் அதிர்ச்சியினின்றும் விடுபடுமுன் அவள் அந்தப் பக்கத்தைக் கடந்து வேறு பக்கம் சென்று விடுகிறாள்.

சந்தை இரைச்சல்...வாங்குபவர் யார், விற்பவர் யார் என்று புரிந்து கொள்ள முடியாத இரைச்சல். சிறியவர். பெரியவர், ஆடவர், பெண்டிர், கிராமம், பட்டினம், நாய்;. மாடு, சகதி, அழுகல், ஈக்கள் யாருமே எதுவுமே அவன் கண் களிலும் கருத்திலும் நிலைக்கவில்லை. -