பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 கரிப்பு மணிகள்

பாவி குடிச்சிட்டு வந்து...பாவி குடிச்சிட்டு வந்து... நாச்சப்பனா?

நரம்புகள் புடைக்கின்றன.

“உங்கள் உழைப்பை எல்லாம் அந்தக் காரில் வரும் முதலாளிக்குக் கொடுக்கிறீர்கள். பிள்ளை பெறுவரையிலும் உழைக்கிறீர்கள்’ என்று எத்தனை எடுத்துச் சொன்னாலும் விழிக்கவே அஞ்சும் இந்தப் பெண்கள்...

முதல்நாள் அந்தப் பெண்ணிடம் அந்தக் கணக்குப் பிள்ளை-மாண்டு மடிந்தவனின் மனைவியிடம், அம்முதலாளித் தெய்வத்தின் பூசாரியான கணக்கப்பிள்ளை, இறந்த என் புருசன் அந்த அளத்தில் வேலை செய்யும் தொழிலாளியல்ல! என்று எழுதிக் கொடுத்து அதன் கீழ் அவளைக் கையெழுத்துப் போடச் செய்திருக்கிறான். அதற்குக் கூலி அவனது ஈமச்செலவுக்கான நூறு ரூபாய். அவன் அளத் தொழிலாளியானால் நட்டஈடு என்று தொழிற்சங்கக்காரர்கள் துண்டிவிடுவார்கள் என்று முன்னெச்சரிக்கையாகக் கையெழுத்து வாங்கிச் சென்றிருக்கின்றனர்.

“மக்கா, ஊருல ஒன்னொண்னு பேசிக்கிறாவ...நீ

எதுக்கும் போவாண்டா. அளத்துல டிகிரி வேலை, மாசச் சம்பளம் எல்லாமிருக்கு. இங்க ஆடுமிருக்கு, நீ ஆரு சோலிக்கும் போவண்டா. என் ராசா என்று பேதமையுடன் கெஞ்சும் தாயை நினைத்து இரங்குகிறான். தான் சந்தைக்கு எதற்கு வந்தர்னென்று புரியாமல் சுற்றி வருகிறான். நினைக்கவே நெஞ்சு பொறுக்கவில்லை. வெய்யோன் என்னாட்சிதானென்று தனது வெங்கிரணங்களால் தென் பட்ட இடங்களில் எல்லாம் ஈரத்தை உறிஞ்சுகிறான். சந்தையில் ஞாயிற்றுக்கிழமை பகல் நேரங்களில் குழுமுபவர் கள் முக்காலும் உப்பளத் தொழிலாளர்தாம். இவர்கள் சூரியன் மேற்கே சாய்ந்தால் வெளிக் கிளம்பமாட்டார்கள். ஆணானாலும் பெண்ணானாலும் நேர்ப்பார்வை பார்க்க

  • மக்கா-பையா