பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் IIS

மாட்டார்கள். கீழ்ப்பார்வை, அல்லது சரித்துக் கொண்டு பார்க்கும் கோணல் பார்வையால் தான் உலகைக்காண வேண்டும். முடியில் உப்புக் காரம் ஏறி ஏறிக் கருமையும் கனமும் தேய்ந்து நைந்துவிட, முப்பது முப்பத்தைந்துப் பருவத்திலேயே முடி பதம் பண்ணிய தேங்காய்ப் பஞ்க போலாகிவிடுகிறது.

பஸ், நிறுத்தத்தில் ஒரு கங்காணியும் ஏழெட்டுத் தொழி லாளரும் நிற்கின்றனர். வாய் திறக்காமல் பெண்கள் நடை பாதையில் குந்திக் கிடக்கின்றனர். புருசன் வீடு, குழந்தைகள் என்ற மென்மையான தொடர்புகளை எல்லாம் துண்டித்துக் கொண்டு இந்த நடைபாதையில் சுருண்டு கிடக்கின்றனர். எப்போது சாப்பாடோ, குளியலோ, தூக்கமோ? லாரிக்காகக் காத்திருப்பார்கள். லாரி எப்போது வந்தாலும் சுறுசுறுப்புடன் சென்று பசி எரிச்சலானாலும் உழைக்கவேண்டும். அப்போது காசு கிடைக்கும். காசைக் கண்டபின் அந்தத் துண்டிக்கப் பட்ட பாச இழைகள் உயிர்ப்புடன் இயங்கத் தொடங்கும்.

“புள்ளக்கிக் க்ாயலாவாயிருக்கு கொஞ்ச நேரம் முன்ன போகணும்’ என்றால் நடக்குமா? இல்லை என்றர்ல் வேலை இல்லை. கெஞ்சலுக்கெல்லாம் இங்கே இளகும் நெஞ்சங்கள்

கிடையாது.

“பாத்திக் காட்டில் ஆம்பிளயக் காட்டிலும் கால் தேய நீங்கள் பெட்டி சுமக்கிறிய. ஆனா ஒங்களுக்கு ஆம்பிளக் கூலி கிடையாது. நினைச்சிப் பாருங்க. ஒங்களுக்கு எத்தனை கஷ்டமிருக்கு? நீங்கல்லாம் கூடிச்சங்கத்திலே ஒரு குரலா முடிவெடுத்து ஏன் எதிர்க்கக் கூடாது’ என்று அவன் அன்னக்கிளி, பேரியாச்சி எல்லோரிடமும் வாசலில் குந்தி யிருக்கும் ஞாயிற்றுக் கிழமைகளில் பேசுவான்.

சங்கம் என்ற சொல்லைக் கேட்டாலே மருண்டு போவார்கள்.

‘சங்கமின்னு காருவா பிரிச்சிட்டுப் பிரிச்சிட்டுப் போவா. அதொண்ணும் வராது, சங்கந்தா ஒப்பனக் கொன்னிச்சி..."