பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 கரிப்பு மணிகள்

என்று பேரியாச்சி அவன் தாய்க்கு ஒத்துப்பாடு வாள். - -

‘சங்கம் சேந்து போராடினால், சம கூலி மட்டுமில்லை, பேறு கால வசதி, ஆசுபத்திரி மருத்துவ வசதி, பிள்ளைப் பால், படிக்க வசதி, நல்ல சாப்பாடு, ஒய்வுகாலப் பென்சன், குடியிருக்க வசதியான வீடு, சம்பளத்துடன் லீவு...’ என்று அவன் அடுக்கினால் அவர்கள் சிரிப்பார்கள். *வெடலப் புள்ள, அகராதியாப் பேசுதா...” என்பார்கள்.

பேரியாச்சிக்குக் காலில் ரணம் காய்ந்த நாளே யில்லை.

“ஆச்சி, செருப்புப் போட்டுக்கிட்டு பாத்தில நின்று கொத்திவிட்டா என்ன?’ என்று அவன் அவள் வாயைக் கிளறுவான்.

‘சீதேவிய, சீதேவிய செருப்பப் போட்டு மிதிக்கவா?* என்பாள். -

அப்ப மண்ணுக்டச் சீதேவி தா. அதுல்தா வுழறோம்.

எச்சித் துப்பறோம், அசிங்கம் பண்றோம். அதெல்லா செய்யக் கூடாதா?”

போலே...கச்சி பேசாம போ!’ என்பாள்.

பொன்னாச்சி...பொன்னாச்சி! நீ வித்தியாசமான பெண் என்று . அவன் நினைத்திருந்தானே?...உன்னை...அந்தப் பேய்...நாச்சப்பன். o

நெற்றியிலிருந்து வேர்த்து வடிகிறது. தந்தியாபீக. முனையில் சுப்பையா அவன்ைத் தடுத்தாட் கொள்கிறான்.

சாயங்காலம் அஞ்சு மணிக்கு நம்மவீட்டில கூடுறோம். தெரியுமில்ல?” -

“அது சரி பொண்டுவள்ளாம் வாராவளா கூட்டத் துக்கு?”

கப்பையா விழித்துப் பார்க்கிறான்.