பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 121

“பொண்டுவளா? எதுக்கு?”

‘'எதுக்குன்னா, பேசத்தான்! அவங்க பிரச்சினையும் இருக்கு பாரு?”

“அது சரிதா. அவளுவ வந்து என்ன பேசுவா? ஞாயித்துக்கிளம, தண்ணி தவிக கொண்டார, துணி துவைக்க், புள்ள குளிப்பாட்ட, எண்ண தேச்சி முழுவ இதுக்கே நேரம் பத்தாதே? அதுமிதும் போச்சின்னா பாதி பேரு சினிமாக் கொட்டாயிக்குப் போயிடுவா? பொண்டு வள்ளாம் வரமாட்டா...”

‘இல்ல அண்ணாச்சி, நாம என்ன செஞ்சாலும் பொண்டுவளச் சேக்கலேன்னா புண்ணியமில்ல. நாம கண்ணுக்கு பாதுகாப்பு வேணும், மேஜோடு குடுக்கணும். ஒருகா வாரத்தில் சம்பளத்து லீவு. பிறகு ஒன்பது நாள் விசேச லீவு. போனக, வருசம் முச்சூடும் தொழில் பாது காப்பு. இதெல்லாம் கேட்டா மட்டும் பத் தாது பாத்திக் காட்டில் வேலை செய்யும் தாய்மார், தங்கச்சிய, இன்னிககு எந்தவிதமான பத்திரமும் இல்லாம இருக்காங்க, புருச மாரா இருக்கிறவங்களுக்கும் அவங்களுக்குப் பாதுகாப்பா இல்ல. அண்ணன் தம்பியும் ப்ாதுகாப்பு இல்ல. கோழிக் குஞ்சைக்கூடத் தாய்க் கோழி சிறகை விரிச்சி மூடிப் பருந் திட்ட இருந்து காப்பாத்துது. நம்ம மனுச இனத்தில் நம்ம பொண்டுவ, கழுகும் பருந்துமாக இருக்கும் மனிசங்க கிட்ட தப்ப முடியாம தவிக்கிறாங்க. இதுக்கு நாம வழி செய்யண்டாமா? நமக்கு மானம் இருக்கா? நீங்க சொல் லுங்க அண்ணாச்சி, நாம தமிளன் மானம், இந்தியன் மானம்னு அளவாப் பேசுதோம்! பொண்டுவளக் கூட்டாம சங்கக் கூட்டமில்ல...அவ்ங்களைக் கூப்பிடனும், அவங்களுக்கு நாமதா தயிரியம் சொல்லணும்...’

இந்தப் புதிய வேகத்தின் ஊற்றுக் கண் எப்போது பிறந்ததென்று புரியாமலே கப்பையா பார்த்துக் கொண் டிருக்கிறான்.

  • -8