பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 22 கரிப்பு மணிகள்

ராமசாமி வெறும் பேச்சாகப் பேசவில்ைை.

அவனுடைய மூலாதாரத்திலிருந்து புறப்பட்டதோர். எழுச்சியாகவே அந்தக் குரல் ஒலிக்கிறது.

11

அருணாசலம் வாரு பலகை கொண்டு பளிங்கு மணி களாகக் கலகலக்கும் உப்பை வரப்பில் ஒதுக்குகிறார். ஆச்சி வேறொருபுறம் அவர் முதல்நாள் ஒதுக்கிய உப்பைக் குவித்துக் கொண்டிருக்கிறாள். தொழிக்குக் கிணற்றி லிருந்து நீர் பாயும் சிற்றோடையில் குமரன் குச்சியை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறான்.

சரேலென்று, “அப்பச்சி தங்கபாண்டி வண்டி கொன் டாரா?” என்று கூவுகிறான். தங்கபாண்டி வண்டி ஒட்டிக் கொண்டு வந்தால் அப்பச்சியிடம் காக புரளும் என்று அவளுக்குத் தெரியும். - ,

ட கடக வென்று ஒசை கேட்கிறது. பசுமஞ்சளாய்க் குழியில் தேங்கியிருக்கும் நஞ்சோடை நீரில் சக்கரம் இறங்க, அவன் மாடுகளை ஒட்டிக்கொண்டு வருகிறான். கன்னங்கரேலென்ற வெற்றுமேனியில் வேர்வை வழி கிறது. குட்டையாக இருந்தாலும் களையான முகம், சிறுகச் சிறுகப் பணம் சேர்த்து சொந்த வண்டி மாடு வாங்கிவிட்டான். துரும்பைப் பல்லில் கடித்துக்கொண்டு. “எத்தினி மூடையிருக்கு மாமா?’ என்று கேட்கிறான், “நீ வெல சொல்லுலே?” “என்ன மாமா, புதுசா வெல கேக்குறியi.ஆச்சி: மூடை போடலாமா?’’

இவன் சாக்குகளைக் கீழே போடுகிறான். அருணாசலம் பாத்தியை விட்டு மேலே வந்து அவன் உப்பில் கைவைக்காத வண்ணம் மறிக்கிறார்.

“லே, வெல முடிவு செய்யாம உப்பு ைகைவைக்கரத:

அவன் பளிரென்று பற்கள் தெரியக் அலசலவென்று: சிரிக்கிறான்