பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 125

“சரி மாமா. வெல சொல்லும். உமக்கு இல்லாத வெலயா? நீரு கேக்றதக் குடுத்தாப் போச்சி?”

“ஏலே சக்கர யாப் பேசிட்டாப்பல ஆச்சா? ஒட தாண்டிட்டா அத லாரி நிக்கிது. நீ அவுங்க மூடைக்கு, என்ன வாங்குவியோ. அதல அரை ரூவா கொறச்சிக்க...’

  • சரி மாமா, ஒம்ம பொன்னான கையால போடும்...’ அவன் சாக்கை விரித்துப் பிடிக்கிறான்.
  • ஏன்லே, நான் சொல்லிட்டே இருக்கிறே, நீ சிரிக் கிறே?”

என்ன மாமா, நீங்க எவ்வளவு வேணுமின்னு சொல் லுங்க. மூடைக்கு அஞ்சு ருவா தார...’

இந்தப் பேச்செல்லாம் வேண்டா. மூடை ரெண்டரை -ரூவா, அாசைக் கீழ வச்சிட்டு மூடை போட்டுக்க...’

தங்கபாண்டி “சரி மூடை ரெண்டரை’ என்று மடி யைத் திறந்து ஒரு பத்து ரூபாய் நோட்டு எடுக்கிறான்.

‘வச்சிக்கும் அடுவான்ஸ்...” பன்னிரண்டு மூடைகள் இருக்கின்றன. அவனே மூட்டையினைப் பற்றி ஏற்றுகிறான். வண்டி கடகட வென்று ஆடிச் சரிந்து கொண்டு மெல்லப் பாதையில் செல்கிறது. . -

ஒவ்வொரு முறையும் இதுபோல்தான் அவரும் பேசு வார். அவனும் நைச்சியமாக விட்டுக் கொடுக்காமலே இழுத்தடிப்பான். -

பத்து ரூபாய் வந்த மாதிரி மீதிப்பணம் வராது. அவரும் கேட்டுக் கேட்டு அதிகப்படியே வாங்கிக் கொண்டு உப்புக்கு வகை வைப்பார் !

அவர் ஆச்சி மண் குடத்தில் வைத்திருக்கும் நல்ல நீரைச் சரித்துக் குடிக்கிறார்.

“என்ன இப்பப் போய் தண்ணி குடிக்கிறிய சோறு கொண்டாந்திருக்கேனே வேணrவா?”

“தண்ணி குடிக்கிறதுக்குகூட ஏன் காரு வாரு?"