பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I36 கரிப்பு மணிகள்

பேசுணதொண்ணு. இப்ப ஊருல என்ன சொல்றா? அந்த வுள்ளக்கி சோறு கூடப்போடல, அப்பங்கிட்ட வெரட் டிட்டான்னு சொல்றா! என் தலயெளுத்து...’

மூசு மூசென்று அழத் தொடங்கியவளாக அவள் பானையை எடுத்துக் கொண்டு வீட்டைப் பார்க்க நடக் கிறாள்.

அவருக்கு இது பலவீனமான பகுதி. உண்மையில் அன்று’ அவர்களை அழைத்து வரவேண்டும் என்றுதான் சென்றார். ஆனால், பொன்னாச்சி அங்கிருந்து வர வேண்டும் என்று விரும்பியதாகத் தெரியவில்லை. இங்கே மனைவி அவளை எப்போதும் பிடுங்கிக் கொண்டிருந் தான். தன் கண் முன் இன்னொரு பாத்திக்காட்டுக்கு அவளை அனுப்ப அவர் மனம் துண்ணியவில்லை. பிறகு அந்தக் காசும் அவள் கையில் தங்காது. இப்போது. எங்கேனும் வட்டிக் கடனேனும் வாங்கி தங்கபாண்டிக்கு அவளை மண முடித்து விடவேண்டும்.

வீட்டுக்கு வந்ததும் பத்து ரூபாய் நோட்டை மாற்றி வந்து அவளிடம் ஐந்து ரூபாயைக் கொடுக்கிறார். குஞ்சரி கணக்குப் போட்டுக் கொண்டு இருக்கிறது. உள்ளே வந்து சட்டையை ஆணியில் இருந்து எடுக்கையில் கீழே கட்டம் போட்ட தொங்குபை வீற்றிருக்கிறது. ‘வேலு வந்திருக்கிறானா?-எப்ப வந்தா?’’

‘அண்ணன் வந்திட்டா அப்பவே...’ ‘பரீட்சை நல்லா எழுதியிருக்கிறனாமா? 4ாங்க போயிட்டாரு துரை?’ எதுவும் பதில் வரவில்லை.

அவருக்குக் கோபமாக வருகிறது; பெரிய துரை போல் செருப்பு, சட்டை அவன் முடியும், காலில் போட் டுக் கொள்ளும் யானைக் குழாயும்!

தீர்வையை நினைவுறுத்தி வந்த கடிதத்தை அன்று பெட்டிக்குள் வைத்துவிட்டுப் போனார். மேலே பலகை யில் இருந்து அதை அவர் எடுக்கிறார். பழைய தகரப் பெட்டி, அதில்தான் அவருடைய கூட்டுறவுச் சங்கக் காகி