பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130, கரிப்பு மணிகள்

ராமசாமி திகைத்துப் போகிறான்.

“எல்லாரும் காலி பண்ணணுமா?”

‘ஜபக்கூடம் கட்டணுமின்னு பிளான் போட்டிருக்காவ: நீ இந்த அளத்துக்காரனில்ல. இந்த அளத்துக்காரவுக கொஞ்சந்தா, வேற எடம் ஒதுக்குவாக. ஏதோ அத்த:

நாள்ளேந்து இருந்திய, ஒண்ணும் சொல்லாம இருந்தம். “இப்ப எடம் தேவைப்படுது.”

“இப்ப திடீர்னு காலி பண்ணனுன்னா எங்கே போவ? எடம் பார்க்கணுமில்ல7 கொஞ்சம் டயம் குடுங்க...”

‘ஒன் ைஆளக்காணவே முடியல சங்கம். அது இதுண்ணு. போயிடற, மின்ன சொல்லலன்னா ஏந்தப்பா ஒருவாரம் டயம்தார. காலிபண்ணிப்போடு!”

ஏஜண்ட் கூறி ஒருவாரத்துக்கு மேலாகிவிட்டது. அவன் வேறு இடம் பார்க்க முனையவில்லை. தொழிற் சங்க சடுப்ாடு அதிகமாக, பல் பிரச்னைகளிலும் தல்ைக் கொடுத்துக் கொண்டிருந்தான். பகல் நேரங்களில் பொன்னாச்சியையும் தம்பிய்ையும் பார்க்கும்போது மனசு துடிக்கும். மாலையில் அவர்கள் வீடுதிரும்புவதையும் அவனால் கண்காணிக்காமல் இருக்கமுடியவில்லை. நாச்சப்பனைப் பார்க்குந்தோறும் அவன் உள்ளத்தில் வெறுப்பு குமைய மீசை துடிக்கும்.

உப்பளத்து ஈரங்களை வற்றச் செய்யும் காற்று அந்த மக்களின் செவிகளிலும் சில பல சொற்களைப் பரப்பு கின்றன.

பனஞ்சோலை அளமும், துரை அளமும் ஒவ்வோர் வகையில் அந்தச் சொற்களை, செய்திகளை உள்ளே அது. மதிக்காத கற்கோட்டைகளாக இருக்கலாம். , அந்தக் கற் கோட்டைகள், பஞ்சைத் தொழிலாளரின் அத்தியாவசியத் தேவைகளையும், இவர்களுடைய அட்வான்சு, சீலை போனக, என்பன போன்ற வண்மைப் பூச்சையும் குழைத்