பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 131

‘துக் கட்டியவை. இந்தச் சாந்துதான் இங்கே பமைாக:

நிற்கிறது. .

ஏனைய அளங்களில் வறுமைத் தேவையுடன் கூலிக் காக என்ற வெறும் நீரைச் சேர்த்து எழுப்பும் மதில்கள் இடைவிடாத அரிப்புக்கு இடம் கொடுக்கின்றன. அவ்’ வப்போது வேலை நிறுத்தம். தடியடி பூசல் அங்கெல் லாம் நிகழ்ந்தாலும் இங்கு அவை எட்டிப் பார்ப்ப தில்லை. நிர்ணயக்கூலி ஆணுக்கும் பெண்ணுக்கும் சம மில்லை என்றாலும் ஒரளவு அங்கெல்லாம் நிர்ணயக்கூலி நடைமுறைக்கு வந்திருக்கிறது. இங்கோ முதலாளி கணக்கில் நாள் கணக்கு நிர்ணயக்கூலி, மாசச் சம்பளம் என்று பெறுவர் சொற்பமானவர். பெரும்பாலான தொழிலாளர், காண்ட்ராக்ட் என்ற முறையில் நிர்ணயக் கூலிக்கும் குறைவான கூலிக்கு அடிமைப்படுத்தப் பெற்றி ருக்கின்றனர். - -

‘பணஞ்சோலை அளத் தொழிலாளரே! ஒன்று சேருங்கள்! எட்டுமணி நேர வேலைக் கேற்ற ஊதியம். பதிவுபெறும் உரிமை. வாராந்தர் ஒப்வுநாளைய ஊதியம்-இவை அனைத்தும் உங்கள் உரிமை! தாய்மார்களே! உங்கள் சக்தியைச் சிதற விடாதீர்கள்! ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான கூலி...’ என்பன போன்ற வாசகங்கள் அச்சிடப் பெற்ற துண்டுப் பிரசுரங் கள் எங்கிருந்து பிறந்தது எப்படி வந்ததென்று புலப் படாமல் தொழிலாளரின் உள்ளுணர்வைச் சிண்டி விடுகின்றன.

ஒவ்வொரு அளத்திலும் துடிக்கும் இளம் ரத்தத்துக் குரியவர்களைக் கண்டு பிடித்துத் துணைவர்களாக்கிக் கொள்ள ராமசாமி முயன்று கொண்டிருக்கிறான். பனஞ்: சோளை அளத்துக் கற்கோட்டையைத் தகர்த்துவிட அவர் கள் திடங் கொண்டு உழைக்கின்றனர்.

அந்நாள் சனிக்கிழமை, ராமசாமி பதினெட்டாம் நம்பர் பாத்தியை டிகிரி பார்த்துக் கொண்டிருக்கிறான். அ. போது விரைவாகக் கணக்கப்பிள்ளை தங்கராசு வரு